ETV Bharat / bharat

PM Modi : பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.. நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்! - india prime minister

பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Modi
Modi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 12:40 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குஜராத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்து சிறந்த தலைவராக விளங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் இன்று (செப். 17) தனது 73வது பிறந்த நாளை முன்னிட்டு "யஷோபூமி" எனும் கன்வென்ஷன் மையத்தை டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மையத்தில் பெரிய ஹால், 15 கன்வென்ஷன் ரூம்கள், பார்கிங் வசதி மற்றும் பாதுகாவலர் வசதி உள்பட 11 ஆயிரம் பேர் தங்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் சிலிகுரியில் பிரதமர் மோடியை போன்று ஆடை அணிந்து கேக் வெட்டி சிறுவர்கள் கொண்டாடினர். பிரதமர் மோடியின் உருவம் பொறித்த முகமூடியை அணிந்து சிறுவர்கள் கொண்டாடினர்.

  • #WATCH | Odisha: A Cuttack-based smoke artist, Deepak Biswal makes a portrait of PM Narendra Modi for his 73rd birthday.

    PM Modi is celebrating his birthday today, 17th September. pic.twitter.com/xo752bW5z7

    — ANI (@ANI) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஓடிசா கட்டாக்கைச் சேர்ந்த புகை ஓவியக் கலைஞர் ஒருவர், மோடியின் உருவப்படத்தை தத்ரூபமாக வடிவமைத்து அவருக்கு பரிசளித்து உள்ளார். இதேபோல் அவரது சொந்த மாநிலமான குஜராத், அகமதாபாத்தில் உள்ள ரிவர் க்ரூஸ் உணவகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கேக் வெட்டி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு “சேவா பாவ்” என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த செயலியின் மூலம் பொது மக்கள், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

மோடி கடந்து வந்த பாதை: 1950ஆவது வருடம் செப்.17 ஆம் தேதி குஜராத்தில் உள்ள மகேசனா மாவட்டம், வத்நகர் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். தனது 22ஆம் வயதில், அதாவது, 1972ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்(RSS) சங்கத்தில் சேர்ந்து தன்னார்வ தொண்டராக தனது பணியைத் தொடங்கினார்.

1978ல் தனது சிறந்த உழைப்பின் மூலம் வதோதராவில் துறைசார் பிரச்சாரகர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 1980ல், தேசிய தன்னார்வ சங்கத்தின் தெற்கு குஜராத் மற்றும் சூரத் பிரிவுகளின் பிரச்சாரகரானார். அதன்பின், 1987ல் குஜராத் மாநிலத்தில் பாஜக பொதுச் செயலாளராக பணிபுரிந்தார்.

1987ல் பாஜக தலைவர் லால் கிருஷ்னா அத்வானி ஆரம்பித்த 'நயாயா ராத்' யாத்ராவில் பங்கேற்றார். 1990ல் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 67 இடங்களில் 43 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தன. இதில் மோடியின் பங்கு மிக முக்கியமானது. அதன்பின், நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் மோடியின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

பின்னர், கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக பிரதமர் மோடி பொறுப்பேற்றார். தொடர்ந்து 13 வருடங்களாக குஜராத் முதலமைச்சராக மே 22, 2014 வரை இருந்தார். பின்னர், பிரதமர் வேட்பாளருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை குஜராத் தேர்தலில் மகுடம் சூடி தனது கட்சியை வலுவாக காலூன்ற வைத்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே பிரதமர் மோடி வைத்து உள்ளார்.

இதையும் படிங்க:Neeraj Chopra : டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்... வெள்ளி வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.