ETV Bharat / bharat

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் முடிவு - பிரதமர் மோடி

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம் ஏன்  -  சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கேள்வி

author img

By

Published : Jul 25, 2023, 10:41 AM IST

Updated : Jul 25, 2023, 11:43 AM IST

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி, எதிர்கட்சிகள் தொடர் அமளியின் காரணமாக, இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தான் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிகழும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 24) நடத்திய போராட்டத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடங்கின. காங்கிரஸின் கூற்றுப்படி, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

ஆனால், இந்த விவகாரத்தில் சில உண்மைகள் வெளிவருவதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை என்று பாஜக பதில் அளித்து உள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிகழ்வின்போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையின் மையப் பகுதிக்கு சென்று நாற்காலியை சுட்டிக்காட்டியதால் சபாநாயகரின் உத்தரவுகளை மீண்டும் மீறியதற்காக அவர் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன், மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர், சஞ்சய் சிங்கின் "கட்டுப்பாடற்ற நடத்தைக்கு" எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்பு போராட்டம்: சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, அரசு தங்கள் குரலை நசுக்குவதாகக் குற்றம் சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை விடிய விடிய நடத்தி வருகின்றன.

  • #WATCH | AAP MP Sanjay Singh, says "Why is the Prime Minister silent on such a sensitive issue like Manipur? We are only demanding him to come to Parliament and speak on this issue. I will not comment on Rajya Sabha Chairman Jagdeep Dhankhar for suspending me as he is not someone… pic.twitter.com/0SuXxxmW8V

    — ANI (@ANI) July 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் ஏன் மவுனம் காக்கிறார்? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், "மணிப்பூர் போன்ற முக்கியமான பிரச்னையில் பிரதமர் ஏன் மவுனம் காக்கிறார்? இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திற்கு வந்து பேச வேண்டும் என்றுதான் நாங்கள் அவரைக் கோருகிறோம்.

ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் என்னை சஸ்பெண்ட் செய்ததற்காக நான் கருத்து கூற மாட்டேன். அவர் அரசியலுக்கு தொடர்பு இல்லாதவர், அவர் துணை குடியரசுத் தலைவர். மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது எங்கள் பொறுப்பு" என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலான பொதுக்கடனில் தமிழ்நாடு - மத்திய அரசின் தரவுகள் கூறுவது என்ன?

Last Updated : Jul 25, 2023, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.