ETV Bharat / bharat

Madurai Train Fire Accident : சொந்த ஊர் திரும்பிய 42 பயணிகள்! ஆறா வடுவாய் மாறியதாக புலம்பல்! - train accident

மதுரை ரயில் தீ விபத்தில் உயிர் தப்பிய பயணிகள், சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

மதுரை ரயில் தீ விபத்தில் தப்பிய 42 பயணிகள்  வீடு திருப்பியதாகத் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:59 AM IST

லக்னோ: கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்து வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய ரயிலில் இருந்து பலர் உயிர் தப்பிய நிலையில், வெளியேற வழியின்றி சிலர் ரயிலின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் காலதுறையினர் ரயில் பெட்டிகளில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியானதைத் தொடர்ந்து, விபத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கோரப்பட்டு வந்தது. ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டரை பயன்படுத்தியதே தீ விபத்துக்கான காரணம் என ரயில்வே தரப்பில் இருந்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மதுரையில் இறுதி அஞ்சலி முடிக்கப்பட்டு, மூன்று ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்பு, சென்னை விமான நிலையம் வந்தடைந்த உடல்கள் இண்டிகோ கார்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அதையடுத்து நேற்று (ஆக. 27) மதியம் 12 மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் ஐந்து உடல்களும், 2 மணிக்கு மேல் பெங்களூர் வழியாக லக்னோவிற்கு சென்ற மற்றொரு விமானத்தில் மீதமுள்ள 4 சடலங்களும் கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் விபத்தில் இருந்து தப்பிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 42 பேரும் டெல்லி மற்றும் சென்னை வழியாக லக்னோ சென்றடைந்து, அவரவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நிவாரண ஆணையர் நவீன் குமார் கூறுகையில், "லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், அயோத்தி, ஷாஜகான்பூர் மற்றும் லக்னோ மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் டெல்லி வழியாகவும், 14 பேர் சென்னை வழியாகவும் லக்னோ சென்றடைந்ததாக" கூறினார். மேலும், கூடுதல் தகவலாக விபத்தில் பாதிக்கப்பட்ட 7 பேர் பெங்களூரு வழியாக லக்னோ அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 5 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாவும் தெரிவித்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை.. ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்த சாலை பணியாளர்கள் சங்கம் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.