ETV Bharat / bharat

"தேசத் துரோக சட்டம் அவசியம்" மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 22வது சட்ட ஆணையம் பரிந்துரை! - Sedition Law

124A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவை இந்திய தண்டனைச் சட்டத்தில் தக்கவைக்க கோரி மத்திய சட்ட அமைச்சகத்திற்கு 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

Sedition
Sedition
author img

By

Published : Jun 2, 2023, 5:13 PM IST

டெல்லி : இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என்று, மத்திய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச விரோத சட்டம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தால் கருத்தியல் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாதிப்படைவதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேச துரோக சட்டப் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை மேற்கொள்ளும் வரை, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124 A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தேசத்துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.

அதில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு துவக்கி உள்ளதாகவும் தேசத் துரோக சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனை செயல்முறை அடுத்தகட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டப் பிரிவு தொடர வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்திற்கு, இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, " இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் சில திருத்தங்களை கொண்டு வந்தும், அந்த சட்டத்தின் மீதான பயன்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் தேசத் துரோக சட்டத்தை தவறான முறையில் பின்பற்றப்படுவதை தவிர்க்க மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது கொள்கைகளை தயார் செய்து மத்திய அரசு வெளியிட உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. தேசவிரோத மற்றும் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் தேசத் துரோக சட்டம் முக்கிய பங்காற்றுவதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் கவிழ்க்கும் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க இந்த சட்டம் உதவுவதாகவும், அதேநேரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு ஒப்பான ஒரு விதியை இந்திய தண்டனைச் சட்டத்தில் இணைக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதற்கு ஏற்ப சட்டப் பிரிவில் தேவையான நடைமுறை பாதுகாப்பை வழங்கு வேண்டும் என்று நிதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 22வது இந்திய சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்து உள்ளது.

இதையும் படிங்க : Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.