இந்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் இதுவரை(ஜன - அக்) பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, 157 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பாதுகாப்புப்படையினரிடம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், கடந்த ஜூன் மாதம் 49 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு மாதத்தில் நிகழ்த்தப்பட்ட அதிகப்பட்ச என்கவுன்ட்டர் ஆகும். இந்த விகிதாச்சாரமும் கடந்தாண்டைவிட மிக அதிகம்.
அதேபோல் ஏப்ரல் மாதம் 28 பயங்கரவாதிகளும்; ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 21 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை, தெற்கு காஷ்மீர் பகுதியில் மட்டும் சுமார் 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அதேபோல், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், ஷோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் இருந்து மட்டும் மொத்தம் 98 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக, நடப்பாண்டில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 72 பயங்கரவாதிகளையும்; லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 59 பயங்கரவாதிகளையும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 37 பயங்கரவாதிகளையும், 32 ஐஎஸ் பயங்கரவாதிகளையும் இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இதையும் படிங்க: பிரிவினைவாதிகள் சரணடைவது வரவேற்கத்தக்க ஒன்று - ஜம்மு காஷ்மீர் டிஜிபி