திருவனந்தபுரம் : செவ்வாய்க்கிழமை மாலை (ஜூலை 13) நிலவரப்படி கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.
கேரளத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர், 16 வயது பதின்ம சிறுமி என புதிதாக இருவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
கேரளத்தில் ஜிகா வைரஸ் முதல் பாதிப்பு ஜூலை 9ஆம் தேதி கண்டறியப்பட்டது. அப்போது, 24 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுக்க எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
ஜிகா வைரஸ் ஏடீஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டால் லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், சதை மற்றும் மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகள் முதல் 2 நாள்கள் முதல் 7 நாள்கள் வரை காணப்படும்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ்