கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 196 பேருக்கு கரோனா! - Corona Virus
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 196 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.26) காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, "நாடு முழுவதும் கடந்த 24 புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில் ஒட்டு மொத்தமாக இதுவரை 4 கோடியே 46 லட்சத்து 77,302 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30,695 ஆக உள்ளது. கரோனா தொற்றின் தினசரி விகிதம் 0.56 ஆகவும், வாராந்திர விகிதம் 0.16 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 35,173 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 41,43,179 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.05 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் கடந்த ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தில் இருந்த கரோனா தொற்றின் எண்ணிக்கை, தற்போது நான்கரை கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா