ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - 10 போலீசார், ஒரு ஓட்டுநர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 26, 2023, 5:16 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் போலீசார் வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு ஓட்டுநர் மற்றும் 10 போலீசார் கொல்லப்பட்டனர். காவலர்கள் மரணத்திற்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Naxalite
வெடிகுண்டு

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பேட்டி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(ஏப்.26) தந்தேவாடா மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில சிறப்பு காவல் படையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு போலீசார் அப்பகுதியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

போலீஸ் வாகனம் வரும் வழியில் மாவோயிஸ்ட்டுகள் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் கன்னிவெடிகள் வெடித்தன. இந்த தாக்குதலில் போலீஸ் வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில், வாகனத்தில் இருந்த 10 போலீசார் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் தாக்குதல் நடத்திய மாவோஸ்ட்டுகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • दंतेवाड़ा के थाना अरनपुर क्षेत्र अंतर्गत माओवादी कैडर की उपस्थिति की सूचना पर नक्सल विरोधी अभियान के लिए पहुंचे डीआरजी बल पर आईईडी विस्फोट से हमारे 10 डीआरजी जवान एवं एक चालक के शहीद होने का समाचार बेहद दुखद है।

    हम सब प्रदेशवासी उन्हें अपनी श्रद्धांजलि अर्पित करते हैं। उनके…

    — Bhupesh Baghel (@bhupeshbaghel) April 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தந்தேவாடாவில் அரன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்காக சென்ற சிறப்பு காவல் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 காவலர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் மாநில மக்கள் அனைவரும் பங்கு கொள்கிறோம். உயிரிழந்த 11 பேரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

முன்னதாக, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக கடந்த வாரம், மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு பிஜாப்பூர் மாவட்டத்தில் டார்ரெம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 22 போலீசார் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Parkash Singh Badal: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இதையும் படிங்க: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல் மறைவுக்கு 2 நாள் அரசு துக்கம் - பிரதமர் மோடி அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.