இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவு முறைகள்தான் பலருக்கு பெரும் தீங்காக உள்ளது. உடல் ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, மருத்துவ பலன்கள் கொட்டிக்கிடக்கும் சில பொருள்களை வீட்டில் வைத்திருப்பது அவசியம். அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள சிறந்த விஷயங்களில் ஒன்று ஆப்பிள் சைடர் வினிகர் ஆகும். இது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறியும் ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக ஆயுர்கேர் மருத்துவர் டாக்டர் டி. சைலாஜாவை அணுகினோம்.
ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
ஆப்பிளை கசக்கி ஈஸ்டை அதில் போடும்போது ஃபெர்மன்டேஷன் நடைபெறுகிறது. அதில் உள்ள சர்க்கரையானது ஆல்கஹாலாக மாறுகிறது. அதனோடு பாக்டீரியாவை வைக்கும்போது ஃபெர்மென்டேஷன் மூலம் அசிடிக் ஆசிட் கிடைக்கும். எனவே, இரண்டாவது ஃபெர்மென்டேஷன் செயல்முறையால், ஆப்பிள் சைடர் வினிகர் உருவாகிறது.
ஏ.சி.வி இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வடிகட்டப்படாதது மற்றும் சுத்திகரிக்கப்படாதது ஆகும். அதில், அனைத்து புரதங்களும், பாக்டீரியாக்களும் உள்ளன. மற்றொன்று சுத்திகரிக்கப்பட்டது. இது ஒரு தெளிவான தீர்வாகும். பெரும்பாலும் மக்கள், சுத்திகரிக்கப்படாததை பயன்படுத்தவே அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும்,ஏசிவியை திரவ வடிவில் எடுக்க விரும்பாதோர்களுக்கு, மாத்திரை வடிவிலும் கிடைக்கப்பெறுகிறது. அதில், மஞ்சள் மற்றும் மிளகு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலப்பதனால் ஏற்படும் பலன்கள்:
நீரிழிவு:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ரத்த சர்க்கரை அளவை சீராக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவியாக இருக்கும். இது ரத்த சர்க்கரையை குறைக்கிறது.
உடல் பருமன்:
அதிக எடை கொண்டவர்களுக்கு ஏ.சி.வி சிறந்தது. இது பசியைக் குறைப்பது மட்டுமின்றி உடலில் உள்ள கொழுப்பை எரிக்கிறது. அதிகாலையில் இந்த கலவையை குடிப்பது நல்லது. ஏ.சி.வியில் அமிலம் இருப்பதால், இரைப்பை பிரச்னைகளைத் தவிர்க்க 2 டீஸ்பூன் தேன் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம்:
ஏசிவி உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதய ஆபத்துகளை சீராக்குவதில் முக்கிய காரணியாக உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது. கலவையுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
டீப் வீன் த்ரோம்போசிஸ் (டி.வி.டி)
டி.வி.டி ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரிசெய்வதில் ஏ.சி.வி முக்கிய பங்கு வகிக்கிறது.
வயிற்றுப்போக்கு
சிலருக்கு இரைப்பையில் பிரச்னை உள்ளதால், சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். ஏசிவியில் பெக்டின் உள்ளதால்,வயிற்றுப்போக்கை சரிசெய்கிறது.
ஏசிவியை உபயோகித்து கொப்பளிப்பதன் பலன்கள்:
வாய் மற்றும் தொண்டை
தொண்டை புண், சுவாச பிரச்னை, பற்களில் பிளேக் உருவாக்கம் போன்ற பிரச்னைகளை ஏ.சி.வி உதவியுடன் தீர்க்க முடியும். இதற்கு, அதிகாலையில் 5-10 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
சுடு நீருடன் ஏசிவியை கலப்பதன் பலன்கள்:
சைனஸ் பிரச்னை
சளி,மூக்கடைப்பு,தொடர்ச்சியான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு சுடு நீருடன் ஏசிவியை கலந்து குடிப்பது நல்ல பலனை தரக்கூடும். தண்ணீரை கொதிக்கும் முன் ஏ.சி.வி சேர்க்க கூடாது. தண்ணீர் நன்கு கொதித்த பிறகுதான் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
ஏசிவியை நீரில் கலப்பதனால் உடல் வெளித்தோற்றத்தில் ஏற்படும் பலன்கள்:
சரும பராமரிப்பு
ஏ.சி.வி பருக்களை அழிக்க உதவுகிறது. தோல் நிறத்தை மேம்படுத்துகிறோம். வெயிலால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தை சரிசெய்கிறது. முதலில் ஏசிவியை நீரில் கலந்துவிட வேண்டும். பின்னர், ஒரு பருத்தி பந்தை கலவையில் நனைத்து முகம் மற்றும் தோல் பகுதிகளில் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். அதை 5-10 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளலாம் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இந்த செயல்முறையை முயற்சிக்கலாம். உங்கள் முழு முகத்திலும் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சருமம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க முதலில் அதை ஒரு தோல் சிறிய பகுதியில் முயற்சிப்பது நல்லது.
நகத்தில் பாதிப்பு
நகங்களில் பாக்டீரியாக்கள் உருவானால் அதை தடுத்திட ஏசிவி உதவியாக இருக்கும். ஒரு பருத்தி பந்தை நனைத்து 10-15 நிமிடங்கள் உங்கள் நகத்தில் வைக்கவும். நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்து இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை செய்யலாம்
முடி பராமரிப்பு
பொடுகு உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம். இந்த கலவையை தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். அதன்பிறகு, ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அதே சமயம், இந்த கலவை கண்களில் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் ஏராளமான சுகாதார நன்மைகள் இருந்தாலும், இரைப்பை எரிச்சல், உணர்ச்சிமிக்க பற்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு சரியானது கிடையாது. இதை ஒரு முறை முயற்சிப்பதற்கு முன்பு, மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது ஆகும்.