மதுரை: இன்று காலை திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் இன்டர்சிட்டி ரயில், மதுரை கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்துள்ளது. அப்போது, ரயிலின் கடைசி பெட்டியில் பிரேக் ஃபெயிலியர் ஆனதால், தண்டவாளம் மற்றும் சக்கரம் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த இன்டர்சிட்டி ரயில் மதுரை, கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிக்குடி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.