ETV Bharat / snippets

பெண் தூய்மை பணியாளர்களிடம் மேஸ்திரிகள் ஆபாச பேச்சு? - காரைக்குடியில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 2:30 PM IST

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டில் நகராட்சி தூய்மை பணியில், நிரந்தர தூய்மை பணியாளராக 130 பேரும், ஒப்பந்த தூய்மை பணியாளராக 236 பேரும், பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு மேஸ்திரிகளாக பணிபுரிபவர்கள், மனோஜ் குமார் மற்றும் துரை சிங்கம். இருவரும் பெண் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை ஆபாச வார்த்தைகளில் பேசுவதாகவும், ஆண் தூய்மை பணியாளர்களை வயது வித்தியாசம் இல்லாமல் மரியாதைக் குறைவாகப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோபம் அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 236 பேரும், வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போராட்டகார்கள் மேஸ்திரிகள் இருவரையும் தனியார் தூய்மை ஒப்பந்ததாரர் பணிநீக்கம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர். இல்லாவிடில், அதுவரை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக கூறி தனியார் தூய்மை ஒப்பந்ததாரர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.