ETV Bharat / snippets

வயநாடு நிலச்சரிவு; தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 8:23 PM IST

பனிமய மாதா பேராலயத்தில் மக்கள் பிராத்தனை
பனிமய மாதா பேராலயத்தில் மக்கள் பிராத்தனை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து பெற்றது. இந்த பேராலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டு 442ஆம் ஆண்டுக்கான திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளைகளில் ஜெபமாலை, மறையுறை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர், திருப்பலி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏழாம் நாளான இன்று மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், லூசியா மாற்றுத்திறனாளி இல்ல இயக்குனர் பென்சன் தலைமையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பிராத்தனை செய்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர் பவனி ஆகஸ்ட் 5ஆம் தேதி வெகுசிறப்பாக நடைபெற உள்ளது‌.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.