ETV Bharat / snippets

பெரம்பூர் ரயில் நிலையத்தில் வடமாநிலப் பெண்ணுக்கு பிரசவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 6:51 PM IST

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை
பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை (Credit -ETVBharat TamilNadu)

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசித் கன்டுல். இவர் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி மேபல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்கு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்துள்ளனர். அதனால், ஒடிசாவில் உள்ள ரூர்கேலா சந்திப்பு ரயில் நிலையத்திற்குச் செல்ல, பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் காத்திருந்தனர்.

அப்போது, மேபல்-க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதையடுத்து ரயில்வே காவலர்கள் தாயையும், குழந்தையும் மீட்டு ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதேபோல, கடந்த ஜூலை 14ஆம் தேதி சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணத்திலேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து, எழும்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.