செய்தியாளரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை! - Salem Student Tamilaruvi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 7:07 PM IST

சேலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26 முதல் ஏப் 8ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தமிழருவி என்கின்ற மாணவி 500க்கு, 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதை அடுத்து பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் தமிழருவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மாணவி தமிழருவி கூறும் போது, “நான் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள பவளத்தானூரில் வசித்து வருகிறேன். எனது அப்பா தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். நான் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். 

இன்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவில் தாரமங்கலம் பள்ளியில் 493 மதிப்பெண் பெற்றுள்ளேன். இதற்குக் காரணம் எனது பள்ளி ஆசிரியைகள் மற்றும் எனது வகுப்பு தோழிகள் தான். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.