மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் யூடியூப் தளத்தில் புதிய சேவை விரைவில் அறிமுகமாகிறது. கூகுள் நிர்வகிக்கும் யூடியூப் தளத்தை உலகளவில் பல கோடி மக்கள், தங்கள் வீடியோக்களை பதிவேற்றுவதற்காகவும், பிறர் பதிவேற்றிய வீடியோக்களைப் பார்ப்பதற்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில், நிறுவனம் யூடியூப் ஷார்ட்ஸ் (Youtube Shorts) வீடியோ உருவாக்கும் நபர்களுக்கு உதவியாக 'Veo' தொழில்நுட்பத்தை விரைவில் சேர்க்கவுள்ளது.
கூகுள் இதை அறிமுகம் செய்யும்பட்சத்தில், ஷார்ட்ஸ் வீடியோக்களை பயனர்கள் விரைவாகவும், எளிதாகவும் உருவாக்கிப் பதிவேற்ற முடியும். கூகுள் டீப்மைண்ட் தரப்பின் செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான Veo சேவையைப் பயன்படுத்தி, எளிதாக வீடியோக்களை உருவாக்க முடியும். மேலும், Thumbnail, கமெண்ட்ஸ் போன்றவற்றையும் எளிதாகக் கையாள இந்த பயன்பாடு கிரியேட்டர்களுக்கு உதவும்.
Our most advanced generative video model Veo is coming to @YouTube Shorts to help creators bring their ideas to life. 🪄 https://t.co/YVhow4pBuD pic.twitter.com/JtcEd51UGT
— Google DeepMind (@GoogleDeepMind) September 18, 2024
யூடியூப் ஷார்ட்ஸ் புதிய AI அம்சங்கள்:
- YouTube தங்கள் புதிய AI மாடல் Veo-வை Shorts-இல் இவ்வாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இது Dream Screens எனும் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட சோதனை அம்சத்தின் மேல் செயல்படுகிறது. இது Shorts-இல் பயனர் வீடியோ பின்னணிகளை உருவாக்க உதவுகிறது.
- எடுத்துக்காட்டாக, “ஒரு புத்தக ஆர்வலர் 'தி சீக்ரெட் கார்டன்' (The Secret Garden) நாவலின் பக்கங்களை ஷார்ட்ஸ் ஆக உருவாக்கலாம் அல்லது ஒரு ஃபேஷன் டிசைனர் அவர்களின் கற்பனைகளை உடனடியாகப் பகிரலாம்" என்று யூடியூப் தெரிவித்துள்ளது.
- Veo ஆனது, யூடியூப் ஷார்ட்ஸ் உருவாக்குபவர்களுக்கு 6 நொடி நீளம் கொண்ட காணொளிகளை உருவாக்கவும் உதவும். வீடியோவை முழுமையாக்க தேவையான கிளிப்புகளை AI உதவியுடன் உருவாக்கி சேர்க்க முடியும்.
- Veo உதவியுடன் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு SynthID என்னும் Google லேபல் வாட்டர்மார்க் இருக்கும்.
- மேலும், யூடியூப்-இல் AI உதவியுடன் கருத்துக்களுக்கு பதிலளிக்க கிரியேட்டர்களுக்கு வசதி வழங்கப்படுகிறது. இவை அவர்களின் தனிப்பட்ட ஸ்டைலுக்கு ஏற்ப முறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
you dream it & Dream Screen creates it 🏞️
— YouTube Creators (@YouTubeCreators) September 18, 2024
Dream Screen will soon be powered by Veo, Google DeepMind’s newest and most capable generative video model, to create backgrounds & imagery like never before. Veo is coming soon & Dream Screen is currently available in the US, CA, AU, NZ pic.twitter.com/47EFVkonEr