ETV Bharat / technology

விண்வெளி சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்தியர்! யார் இந்த கோபிசந்த் தொடகூரா? ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் சாதிக்குமா? - Gopichand Thotakura

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கோபிசந்த் தொடகூரா என்பவர் விரைவில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 1:29 PM IST

ஐதராபாத் : அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மூலம் கோபிசந்த் தொடகூரா விரைவில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான கோபிசந்த் தொடகூரா, முதன்முதலாக விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியர் என்ற சிறப்பை பெற உள்ளார்.

இதற்கு முன் இந்திய ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மா, கடந்த 1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். மேலும் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். அதன் பின் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜாசாரி, ஷிரிஷா பந்த்லா ஆகியோர் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தாலும் அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆவர்.

அதேநேரம் தற்போது விண்வெளி சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள கோபிசந்த் தொடகூரா அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வருகிறார். அதனால் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை கோபிசந்த் தொடகூரா பெற உள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான கோபிசந்த் தொடகூரா, அமெரிக்கா அட்லான்டாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வெல்நெஸ் சென்டரின் இணை நிறுவனராக உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு விண்வெளி சுற்றுப்பயணம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்டு திட்டத்தின் மூலம் இதுவரை 31 பேரை விண்வெளிக்கு சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று உள்ளது.

கோபிசந்த் தொடகூரா உள்பட 6 பேர் விரைவில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து 80 முதல் 100 கிலோ மீட்டர் உயரத்தில் கார்மன் லைன் பகுதியில் பூமியின் ஈர்ப்பு விசையை துறந்து சில மணி நேரங்களில் விண்வெளி பயணத்தை குதூகலிக்க உள்ளனர்.

இதையும் படிங்க : "1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ரூ.1 லட்சம்"- ஆர்ஜேடி தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.