ETV Bharat / technology

எல்பிஜி சிலிண்டர் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்..! - Facts About LPG

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 7:48 PM IST

10 Facts About LPG: எல்பிஜி எரிவாயு என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த 10 முக்கிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

எல்பிஜி சிலிண்டர் - கோப்புப்படம்
எல்பிஜி சிலிண்டர் - கோப்புப்படம் (Credits - ETV Bharat)

ஹைதராபாத்: எல்பிஜி (LPG) தான் வீடுகளில் உள்ள சமையலறை முதல் பல்வேறு துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் வரை பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எரிபொருளாக உள்ளது. இத்தகைய எல்பிஜி என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதன் 10 முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.

  1. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுதான் (Liquefied Petroleum Gas) எல்பிஜி என்று அழைக்கப்படுகிறது. இது முதன்மையாக புரோபேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை உள்ளடக்கிய ஹைட்ரோகார்பன் வாயுக்களின் (Hydrocarbon Gases) குழுவை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொதுவான சொல்லாக இருந்தது.
  2. பொதுவாக, எல்பிஜி என்பது 30 முதல் 70 சதவீதம் புரொப்பேன் (C3H8) மற்றும் 30 முதல் 70 சதவீதம் பியூட்டேன் (C4H10) ஆகியவற்றின் கலவையாகும். ஆனால், பயன்பாட்டைப் பொறுத்து இந்த கலவை மாறுபடலாம்.
  3. எல்பிஜி என்பது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியின் துணை தயாரிப்பு ஆகும். இது இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு செயல்முறைகளின் மூலமாக எல்பிஜி பிரித்தெடுக்கப்பட்டு மற்ற ஹைட்ரோகார்பன்களில் இருந்து பிரிக்கப்படுகிறது.
  4. மற்ற புதைபடிவ எரிபொருட்களுடன் (fossil fuels) ஒப்பிடுகையில் எல்பிஜி ஒரு தூய்மையான மற்றும் சிறந்த ஆற்றல் கொண்ட எரிபொருளாகும். இதன் காரணமாகவே சமையல் முதல் தொழில்துறை பயன்பாடுகள் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு சிறந்த எரிபொருளாக அமைகிறது.
  5. இதன் குறைந்த கொதிநிலை வரம்பு (boiling point) -40 டிகிரி மற்றும் ஆவியாகும் தன்மை (Flash Point) -104 டிகிரி. அதாவது ஒரு அறையின் சராசரி வெப்பநிலையில் எல்பிஜி எளிதில் ஆவியாகிவிடும். இது மிகவும் எரியக்கூடிய தன்மையுடையது. ஆகவே இதனை சரியான பாதுகாப்புடன் கையாளுதல் மிகவும் முக்கியமானது.
  6. எல்பிஜி நிறமற்றது, நச்சுத்தன்மையற்றது மற்றும் காற்றை விட கனமானது. ஆனால், தண்ணீரை விட இலகுவானது. இது நச்சுத்தன்மையற்றது என்றாலும், ஆக்சிஜனை மூடப்பட்ட இடங்களில் இடமாற்றம் செய்து, மூச்சுத்திணறலைக்கூட ஏற்படுத்தக்கூடியது.
  7. இது காற்றில் 1.8 முதல் 10 சதவீதம் வரை குறுகிய அளவில் எரியக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. அதாவது, காற்றில் ஒரு குறிப்பிட்ட செறிவு வரம்பிற்குள் மட்டுமே எல்பிஜியை பற்றவைக்க முடியும். இதன் காரணமாக தற்செயலான தீ விபத்துக்களை குறைக்கிறது. இருப்பினும், இதனை கையாளுகையில் சரியான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
  8. சமையல், வணிகம், தொழில்துறை, போக்குவரத்து என பல்வேறு செயல்பாடுகளுக்காக உலகளவில் 1000க்கும் மேற்பட்ட துறைகளில் எல்பிஜி பயன்படுத்தப்படுகிறது. அதன் பன்முகத்தன்மை பல்வேறு தொழில்கள் மற்றும் உள்நாட்டு பயன்பாடுகளுக்கு ஒரு முதன்மையான தேர்வாக அமைகிறது.
  9. எல்பிஜி என்பது சல்பர் இல்லாத உமிழ்வைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளாகும். மற்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது எல்பிஜி குறைவான மாசுகள் மற்றும் பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gases) உற்பத்தி செய்கிறது.
  10. அதிக ஆற்றல், சுத்தமாக எரித்தல் தன்மை, றைவான மாசு போன்ற காரணங்களால், வாகனங்களின் இயக்கத்தில் சேமிப்பிற்கு வசதியான எரிபொருளாக இந்த எல்பிஜி பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு வழிமுறைகள்:

  • பயன்படுத்துவதற்கு முன் எல்பிஜி சிலிண்டரின் கசிவை முதலில் சரிபார்க்க வேண்டும்
  • சமையலறையில் சரியான காற்றோட்டம் இருக்க வேண்டும்.
  • சமைக்கும் இடங்களில் எல்பிஜி பயன்பாட்டின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தவிர்க்கவும்.
  • எரிவாயு பயன்படுத்தப்படாதபோது எல்பிஜி விநியோகத்தை துண்டிக்க வேண்டும்.
  • கசிவைத் தடுக்க எல்பிஜி அடுப்பு மற்றும் இணைப்புகளை அடிக்கடி ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும்.
  • சமையல் செய்யும் பகுதி மற்றும் எல்பிஜி சிலிண்டர் உள்ள பகுதிகளுக்கு குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது.
  • கேஸ் கசிவு ஏற்பட்டால் ஜன்னல்களைத் திறக்கவும். பின்னர் எல்பிஜி சப்ளையர் அல்லது அவசர சேவைகளை தொடர்பு கொள்ளவும். முடிந்தால் எல்பிஜி சிலிண்டரை வீட்டிற்கு வெளியே வெட்டவெளியில் வைக்கவும்.

குறிப்பு: ஹைதராபாத்தில் வசிக்கும் கரீம் அன்சாரி என்பவர் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு (HPCL) எதிராக RTI விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணத்தை மறுக்க வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு என்றும் கூறியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாக்கெட் உணவுப் பொருட்களில் இதை கவனித்துள்ளீர்களா? ஃபுட் லேபிள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.