ETV Bharat / technology

விறுவிறுப்படையும் ககன்யான் திட்டம்.. ஆளில்லா சோதனை குறித்து சோம்நாத் முக்கிய தகவல்! - ISRO Somnath - ISRO SOMNATH

ISRO Launched SSLV T3 Rocket: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஆளில்லா சோதனை வாகனம் இந்தாண்டு இறுதியில் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 16, 2024, 4:58 PM IST

சென்னை: இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பின்னர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனியாருக்காக இயக்கப்பட்ட நிலையில், அதன் தேவை மற்றும் தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறவுள்ளது.

தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் இனி என்எஸ்ஐஎல் நிறுவனம் மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும். இந்த எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா திட்டம் (unmanned mission) டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் இஸ்ரோ வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை அடைந்த 'EOS 08' - செயற்கைக்கோளின் பயன்பாடுகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.