ETV Bharat / technology

இனி நீங்களும் சோசியல் மீடியா செலிபிரிட்டி ஆகலாம்.. பட்ஜெட் பிரண்ட்லி DSLR கேமரா லிஸ்ட் இதோ! - Budget Friendly DSLR Camera List

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 3, 2024, 7:17 PM IST

Updated : Sep 3, 2024, 7:34 PM IST

Low Budget DSLR Cameras: நீங்கள் குறைந்த விலையில் ஒரு நல்ல DSLR கேமராவை வாங்க விரும்பினால், இந்த ஐந்து DSLR கேமராக்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

DSLR Camera File Image
DSLR Camera File Image (Credits - ETV Bharat Getty Images)

ஹைதராபாத்: இன்று பலரும் கண்டென்ட் கிரியேட்டர்களாகவும், சோசியல் மீடியா செலிபிரிட்டிகளாகவும் உலா வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் சமூக ஊடகங்களின் வளர்ச்சியே. ஆகவே, தங்கள் திறமையை இந்த உலகுக்கு காட்டி, கண்டண்ட் கிரியேட்டர்களாகவோ, சோசியல் மீடியா செலிபிரிட்டிகளாகவோ உருவாக வேண்டும் என சமூக ஊடகங்களை நாடுபவர்களின் முதல் தேர்வாக இருப்பது நல்ல கேமராக்கள். அந்த வகையில், சமூக ஊடக கண்டண்ட் கிரியேட்டர்களுக்காக குறைந்த விலையில் சிறப்பான அம்சங்களுடன் கூடிய ஐந்து DSLR கேமராக்களின் பட்டியலை இங்கே காணலாம்.

கேனான் EOS 200D மார்க் 2 (Canon EOS 200D Mark II): கேனான் EOS 200D மார்க் 2 குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த கேமராக்களில் ஒன்றாகும். முதல் முறையாக DSLR வாங்குபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம். இதன் விலை தோராயமாக ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை உள்ளது. இது ஆன்லைனை விட சற்று குறைந்த விலையில் ஆஃப்லைனில் கிடைக்கிறது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • 24.1 மெகாபிக்சல்
  • CMOS சென்சார்
  • APS-C க்ராப் சென்சார்
  • வினாடிக்கு 25 பிரேம்கள் கொண்ட 4K வீடியோ சப்போர்ட்

சாதக பாதகங்கள்: HDMI அவுட்புட் தெளிவாக இல்லை. எனவே, நேரலையில் ஒளிபரப்புவது சற்று கடினம். ஆனால், நேரடி வீடியோக்களை உருவாக்க விரும்புவோருக்கு இது மிகவும் சரியான தேர்வு. இது எலட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனைக் கொண்டுள்ளது. அதனால் உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஷேக்கிங் இல்லாமல் மிகவும் தெளிவான அவுட்புட் கிடக்கும்.

சோனி ஆல்பா A6000 (Sony Alpha A6000): நடுத்தர பட்ஜெட்டில் நல்ல கேமராவை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த சோனி ஆல்பா A6000 ஒரு நல்ல தேர்வாகும். இது ரூ.65,000 முதல் ரூ.70,000 வரையிலான விலையில் விற்பனையாகிறது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • 24.2 மெகாபிக்சல்
  • CMOS சென்சார்
  • APS-C க்ராப் சென்சார்
  • வினாடிக்கு 60 பிரேம்கள் கொண்ட FHD வீடியோ சப்போர்ட்

சாதக பாதகங்கள்: இது கேனான் EOS 200D மார்க் 2 போன்று அல்லாது தெளிவான HDMI அவுட்புட்டைக் கொண்டுள்ளது. இதனுடன் முழு HD வீடியோக்களை வினாடிக்கு 60 பிரேம்கள் என்ற விகிதத்தில் பதிவு செய்யலாம். ஆனால், அதில் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இல்லை. எனவே நீங்கள் கிம்பல் அல்லது ட்ரைபாட் பயன்படுத்தி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க வேண்டியது கட்டாயம்.

கேனன் M50 மார்க் 2 (Canon M50 Mark II): ஒரு நல்ல மிரர்லேஸ் கேமராவான இந்த கேனன் M50 மார்க் 2 கேமராவின் விலை தோராயமாக ரூ.58,000 முதல் ரூ.60,000 வரை உள்ளது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • 24 மெகாபிக்சல்
  • CMOS சென்சார்
  • APS-C க்ராப் சென்சார்
  • வினாடிக்கு 30 பிரேம்கள் கொண்ட 4K வீடியோ சப்போர்ட்

சாதக பாதகங்கள்: இந்த கேமராவில் தெளிவான HDMI அவுட்புட்டைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலமாக நேரலையில் ஒளிபரப்புவதும், நேரடி வீடியோக்களை பதிவு செய்வதும் மிகவும் சுலபம். இது டிஜிட்டல் வீடியோ ஸ்டேபிலைசேஷனையும் கொண்டுள்ளது. எனவே உங்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எந்த ஷேக்கிங் இல்லாமல் மிகவும் தெளிவாக எடுக்கலாம்.

சோனி ஆல்பா ZV-E10 (Sony Alpha ZV-E10): குறைந்த பட்ஜெட்டில் நல்ல சோனி கேமராவை வாங்க விரும்புவோருக்கு இந்த சோனி ஆல்பா ZV-E10 கேமரா சிறந்த தேர்வாகும். இது தோராயமாக ரூ.52,000 முதல் ரூ.55,000 வரையிலும் விற்பனையாகிறது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • 24.2 மெகாபிக்சல்
  • CMOS சென்சார்
  • APS-C பயிர் சென்சார்

சாதக பாதகங்கள்: இந்த சோனி கேமரா மூலம் வினாடிக்கு 30 பிரேம்கள் என்ற விகிதத்தில் 4K வீடியோக்களை படமாக்க முடியும். வினாடிக்கு 60 பிரேம்கள் என்ற விகிதத்தில் பதிவு செய்யலாம். இதில் தெளிவான HDMI அவுட்புட்டைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலமாக நேரலையில் ஒளிபரப்புவதும், நேரடி வீடியோக்களையும் பதிவு செய்யலாம். மேலும் இந்த கேமரா, எலட்ரிக்கல் வீடியோ ஸ்டேபிலைசேஷனையும் கொண்டுள்ள காரணத்தால், ஷேக்கிங் மற்றும் ப்லெர் இல்லாமல் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க இயலும்.

பேனாசோனிக் LUMIX G7 (Panasonic LUMIX G7): ரூ.50 ஆயிரத்தில் நல்ல கேமராவை வாங்க விரும்புவோருக்கு பேனாசோனிக் LUMIX G7 கேமரா ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த கேமரா சற்று பழைய மாடல் என்பதால் இதன் விலை சுமார் ரூ.42,000 முதல் ரூ.45,000 மாக உள்ளது. ஆனால், இது பழைய மாடலாக இருந்தாலும் இதன் செயல்திறன் சிறப்பானதாக உள்ளது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • 16 மெகாபிக்சல்
  • CMOS சென்சார்
  • APS-C பயிர் சென்சார்
  • 4K மற்றும் FHD வீடியோ சப்போர்ட்

சாதக பாதகங்கள்: இதன் மூலம் 4K மற்றும் முழு HD வீடியோக்களை படமாக்க முடியும். இதில் தெளிவான HDMI அவுட்புட்டைக் கொண்டுள்ளது. ஆனால், வீடியோ ஸ்டேபிலைசேஷன் வசதி இல்லை என்பதால் கிம்பல் அல்லது ட்ரைபாட் பயன்படுத்தி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்தல் அவசியமாகிறது.

குறிப்பு: புல் பிரேம் சென்சார் கேமராக்கள் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது என்பதால், க்ராப் சென்சாருடன் உள்ள DSLR கேமராக்கள் மட்டுமே இந்த பதிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கேமராக்களின் விலை எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. பருவகாலம் மற்றும் தேவையைப் பொறுத்து விற்பனையாளர்கள் தங்கள் விலைகளை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. ஆகவே நீங்கள் DSLR கேமராக்களை வாங்கும்போது வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒப்பிட்டு வாங்குவது சிறப்பானதாக அமையும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வீடியோ கேம் பிரியர்களுக்காக களமிறக்கப்பட்ட Realme 13 Plus 5G.. ஸ்பெசிஃபிகேஷன்ஸ் என்ன தெரியுமா?

Last Updated : Sep 3, 2024, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.