ஹைதராபாத்: கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலகச் சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் 16' வரிசை (iPhone 16 Series) உட்பட புதிய அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் ஏர்பாட்ஸ் (AirPods) மாடல்கள் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நடத்துகின்ற மிகப்பெரிய நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இது குறித்த தகவல்கள் அறிந்தவர்கள் சிலரை மேற்கோள் காட்டி, செப்டம்பர் 20ஆம் தேதி அன்று ஒரு நிகழ்வில் ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராகி வருகிறது என்றும், அதன்படி இந்த ஆண்டு ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என நான்கு மாடல்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வின் நேரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஐபோன் 16 மாடலை பொறுத்தவரையில், அதன் புரோ மாடல்களில் பெரிய திரை மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய கேமரா அம்சம் போன்றவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் ஆப்பிள் ஏஐ அம்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 மாடலுடன் இந்த மாடல் போனில் ஒப்பீட்டளவில் பெரிய வேறுபாடுகள் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோடு வாட்ச் சீரிஸ் 10 மாடல், ஏர்பாட் போன்றவையும் அறிமுகமாக உள்ளது ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சிலிண்டர் காலியாவதை இனி இப்படி தெரிந்து கொள்ளலாம்.. மதுரை பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!