ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே கார் - சரக்கு வேன் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி! - Erode Car Accident - ERODE CAR ACCIDENT

Erode Car Accident: சத்தியமங்கலம் பகுதியில் கார் மீது தக்காளி ஏற்றிச் சென்ற வேன் மோதியதில், ஈரோட்டைச் சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்கள்
உயிரிழந்த இளைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 7:32 AM IST

ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் வேன் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் புதுவடவள்ளி முருகன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி வேகமாக சென்ற ஒரு கார் முருகன் கோயில் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது.

இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 5 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த முகில் நிவாஷ் (வயது 21), கால்பந்து வீரர் தர்மேஷ் (18), கல்லூரி மாணவர் ரோகித் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அங்கிருந்த கிராமமக்கள் உதவியுடன் போலீசார் காரில் சிக்கிய முகில் நிவாஷ் சகோதரர் ஆதி ஸ்ரீவாசன் (18), ஸ்ரீனிவாஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக ஈரோடு, கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் கூறுகையில், “சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக நேற்றிரவு 3 காரில் புறப்பட்ட 12 இளைஞர்கள் ஆசனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முதலாவதாக சென்ற கார் பண்ணாரி சோதனைச்சாவடியை தாண்டி ஆசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து முகிஷ் நிவாஷ் காரும், மற்றொரு காரும் சென்று கொண்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடியில் இரவு 9 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்பதால் இரவு 9 மணிக்குள் பண்ணாரி செக்போஸ்டை நெருக்குவதற்காக வேகமாக காரை ஓட்டியுள்ளார்.

இதில் புதுவடவள்ளி முருகன் கோயில் வளைவில் எதிரே வந்த தக்காளி பாரம் ஏற்றிய லாரி மீது கார் மோதியதில் முகில் நிவாஷ், ரோகித், தர்மேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதில் பயணித்த ஆதி ஸ்ரீவாசன், ஸ்ரீனிவாஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முகில் நிவாஷ்க்கு பின்னால் காரில் வந்த இளைஞர்கள் காயமின்றி தப்பினர். சத்தியமங்கலம் பகுதியில் கார் மீது தக்காளி வேன் மோதியதில் ஈரோட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சாலையில் பற்றி எரிந்து சாம்பலான சுற்றுலா வேன்;கதறி அழுத உரிமையாளர் குடும்பத்தினர்! - fire accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.