ETV Bharat / state

போட் புரமோஷனுக்கு லேட்டா வந்த யோகி பாபு- சொன்ன காரணத்தால் வந்தது சிக்கல்? - Yogi Babu - YOGI BABU

Yogi Babu: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு தாமதமாக வந்த யோகி பாபு, செய்தியாளர்களிடம் மன்னிப்பு கோரினார்.

யோகி பாபு
யோகி பாபு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 8:44 AM IST

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள போட் (Boat) படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கௌரி கிஷன், சிம்புதேவன், எம்.எஸ். பாஸ்கர், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

யோகி பாபு பேட்டி (ETV Bharat Tamil Nadu)

7 மணி அளவில் படக்குழுவினர் அனைவரும் வந்துவிட்ட நிலையில், நடிகர் யோகி பாபு வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிடுவார் என்று கூறப்பட்டது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் படத்தில் நடித்தது குறித்து பத்திரிகையாளர்களிடம் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அதன்பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்டோரும் தங்களது பதில்களை தெரிவித்து வந்தனர். அதன் பின் 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தபிறகு யோகிபாபு வந்தார்.

அத்தனை நேரம் காத்துக்கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் உடனே அவரிடம் தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய யோகி பாபு, "அனைவருக்கும் வணக்கம். சில தினங்களுக்கு முன் குற்றாலத்தில் இருந்து பத்து மணி நேரம் காரில் பயணம் செய்து இப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்றேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். எனது சூழ்நிலை அப்படி மாட்டிக் கொண்டேன். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். எப்போதும் உங்கள் ஒத்துழைப்பு எனக்கு வேண்டும்" என்று பேசினார்.

பெரிய பட்ஜெட் படங்களுக்கும், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் சூழ்நிலை மாறுகிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, புரமோஷனுக்கு என்னிடம் நேரம் சொல்லவில்லை. எல்லா சிக்னலுக்கும் சென்று நான் கேட்க முடியாது இல்லையா. அதற்குத்தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். உங்கள் கோபம் புரிகிறது என்று கூறினார். மேலும் நலிந்த நடிகர்களுக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்தது குறித்த கேள்விக்கு, அது மறைவாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டு சென்றுவிட்டார்

நேற்று காலையில் நடந்த எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்புக்கு அப்படத்தின் நாயகன் அசோக் செல்வன் வரவில்லை. தயாரிப்பாளர் உடன் பிரச்சினை என்றாலும் தான் நடித்த படத்தின் புரொமோஷனுக்கே அவர் வரவில்லை. இது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் மேடையிலேயே தனது ஆதங்கத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? - அசோக் செல்வனை சாடிய கே.ராஜன்! - K Rajan scolded actor Ashok Selvan

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.