ETV Bharat / state

சென்னையில் கெமிக்கல் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு! - Youth died in Acid tank

Worker dies: திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஆசிட் தொட்டியில் தவறி விழுந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WORKER DIES
WORKER DIES
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 3:10 PM IST

சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (20). இவர் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், 55 டிகிரி கொதிநிலையிலிருந்த சோடியம் ஹைட்ராக்சைடு கெமிக்கல் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள நீரில் சுற்றிக் கொண்டிருந்த மெஷின் பழுதாகி உள்ளது.

எனவே, அதனை தொட்டியின் மேல் ஏறி சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கொதி நிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு தொட்டியில் பிரவீன் குமார் தவறி விழுந்ததால், அவரது உடல் முழுவதும் வெந்து போனது. இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்த தகவல் குன்றத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்து போன பிரவீன் குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதம் மாறினால் ரூ.10 கோடி என மோசடி.. தஞ்சாவூர் இளைஞர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.