ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் உண்மையா? கோவை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்! - MAGALIR URIMAI THOGAI FAKE MESSAGE - MAGALIR URIMAI THOGAI FAKE MESSAGE

MAGALIR URIMAI THOGAI FAKE MESSAGE: மகளிர் உரிமைத் தொகைக்கு மனுக்களை விண்ணப்பியுங்கள் என்று வந்த தவறான குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குவிந்த பெண்களால் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள் (Credit -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:58 PM IST

கோயம்புத்தூர்: மகளிர் உரிமைத் தொகை மூலம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான மனுக்களை உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும் என whatsappல் வந்த குறுஞ்செய்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பெண்கள் பேட்டி (Credit -ETVBharat TamilNadu)

அந்த குறுஞ்செய்தியில், "இந்த முகாம் இன்று (17.08.2024), திங்கட்கிழமை (19.08.2024) மற்றும் செவ்வாய்க்கிழமை (20.08.2024) ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெண்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த குறுஞ்செய்தியை நம்பி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அது போன்ற எந்த ஒரு சிறப்பு முகாமும் நடைபெறவில்லை என்பதால் ஏமாற்றமடைந்த பெண்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், இது சம்பந்தமாக அதிகாரிகளை பார்க்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் பெண்கள் முறையிட்டனர். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் என காவல்துறையினர் எடுத்துக் கூறியும், நடவடிக்கை இல்லாமல் தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில், "மகளிர் உரிமை தொகை தொடங்கப்பட்டு ஒரு வருடமான நிலையில், இன்னும் பலருக்கு உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தீர்வு வேண்டும். உரிமைத் தொகை கொடுக்கப்படாதவர்களுக்கு விரையில் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்" என பெண்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இந்த குறுஞ்செய்தியை அனுப்பியது யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, 'மகளிர் உரிமைத்தொகை குறித்து சமூக வலைதளத்தில் வரப்பெற்ற செய்தி வதந்தி என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது' என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit -ETVBharat TamilNadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: வேலை நிறுத்தத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவர்கள்! - Kolkata doctor murder

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.