ETV Bharat / state

மதுரையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை..! காவல்துறை விசாரணை..! - குடும்ப தகராறு

Woman Police Suicide: மதுரை மாநகர காவல்துறை, ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர், காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Madurai Woman Police Suicide
மதுரையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 11:59 AM IST

மதுரை: மதுரை மாநகர ஆயுதப்படை காவல் பிரிவில், தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்துள்ளார். காவல்துறையில் 14 ஆண்டுகளாக பணியாற்றிய சரண்யா, தற்போது ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே இவருக்கும் பாலாஜி என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாலாஜி-சரண்யா தம்பதியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் தங்களது குழந்தைகளுடன் மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜன.27) சரண்யா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதயும் படிங்க: சேலம் அருகே பண்ணை வீட்டில் படுகொலை செய்யப்பட்ட பெண்.. கொலைக்கான பின்னணி என்ன?

அதனைத் தொடர்ந்து, சந்தேகம் அடைந்து, வீட்டுக்குள் வந்த அக்கம்பக்கத்தினர், சரண்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்கொலையைக் கைவிடுக
தற்கொலையைக் கைவிடுக

இது குறித்து, மதுரை மாநகர தல்லாகுளம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சரண்யாவின் உடல் கைபற்று, உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகர காவல் துறையில், ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கார் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு.. தென்காசியில் நடந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.