ETV Bharat / state

என் கணவருக்கு பேய் பிடிச்சிடுச்சி.. மனைவியின் நாடகத்தை தெளியவைத்த பிரேதப் பரிசோதனை.. என்ன நடந்தது? - Villivakkam Murder Case - VILLIVAKKAM MURDER CASE

Wife Arrested for Strangling Husband: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை துப்பட்டவால் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவின் நாடகம் போலீசார் விசாரணையில் வெளிவந்த நிலையில், அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜிதா பானு
ஷாஜிதா பானு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 5:02 PM IST

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 57வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷ்பாஷா. இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கவுஷ் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கவுஷ் பாஷாவிற்கு சர்க்கரை, நுரையீரல், வலிப்பு ஆகிய பாதிப்புகள் இருந்த நிலையில், அவர் இறப்பு குறித்து உறவினர்கள் யாரும் சந்தேகப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். ஆனால், சந்தேகிக்கும் வகையில் மரணமடைந்துள்ள கவுஷ் பாஷா குறித்து தகவல் அறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கவுஷ் பாஷா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர்.

ஆனால், மனைவி ஷாஜிதா பானு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் மத முறைப்படி பிரேத ரிசோதனை செய்ய மாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கவுஷ் பாஷாவின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஷாஜிதா பானுவின் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த போலீசார், அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் வில்லிவாக்கம் போலீசார் கவுஷ் பாஷாவின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் பிரேத பரிசோதனை அறிக்கையில், கவுஷ் பாஷா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்ததுள்ளது.

இதையடுத்து, அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஷாஜிதா பானு தான் தனது கணவர் கவுஷ் பாஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். கவுஷ் பாஷாவிற்கு தோல் நோய் இருந்ததால், ஷாஜிதா பானு அவர் அருகில் செல்லமாட்டாராம். இதனால் கணவன் - மனைவியிடையே தகராறு நடந்துள்ளது.

அப்போது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக கைதான ஷாஜிதா பானு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொலையை மறைக்க அவர் திட்டமிட்டு நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கவுஷ் பாஷாவிற்கு பேய் பிடித்து விட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்ததுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதை கொலை வழக்காக வில்லிவாக்கம் போலீசார் மாற்றம் செய்து நேற்று (ஜூலை 24) பானுவை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆவடியில் பணியில் இருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர் திடீர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.