ETV Bharat / state

“திமுகவில் இளைஞர்கள் கொடி பிடிக்க மட்டுமா?” மயிலாடுதுறை பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்பு! - dmk general members meeting

DMK general members meeting: திமுகவில் கொடி பிடிக்க மட்டும் இளைஞர்களைப் பயன்படுத்துவதால் புதிதாக இளைஞர்கள் கட்சியில் சேர்வதில்லை என மயிலாடுதுறை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் கட்சி உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன்
மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 7:44 PM IST

மயிலாடுதுறை: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கே.ஜி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் மற்றும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை திமுக பொதுக்குழு கூட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் திடீரென்று எழுந்து மைக்கை வாங்கி, “திமுகவுக்கு புதிதாக இளைஞர்கள் வருவதில்லை. அவர்கள் ஏன் கட்சிக்கு வருவதில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அப்பொழுது பேசிய அவர், “பொதுக்குழு கூட்டம் என்று ஆவலுடன் வந்தால் பொதுக்கூட்டம் போன்று நடைபெறுகிறது. திமுக கட்சியில் உள்ளவர்களின் பிள்ளைகள் கட்சிக்கு வருவதில்லை. ஏன் இளைஞர்கள் கட்சிக்கு வருவதில்லை என்பதை சிந்திக்க வேண்டும். காரணம், ஒருவர் கட்சிக்கு சென்று விட்டால் அவர் 30 வருடம் தொடர்ந்து பதவியில் இருக்கிறார். எனவே, நாங்கள் கட்சிக்கு வந்து கொடி பிடிக்க வேண்டுமா? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கட்சியில் மேலே உள்ளவர்கள் மேலேயும், கீழே இருக்கும் தொண்டர்கள் கீழேயும் உள்ளனர். இதனால்தான் இளைஞர்கள் புதிதாக நமது கட்சியில் சேர்வதில்லை. பதவியில் உள்ள பொறுப்பாளர்கள் வருத்தப்பட வேண்டாம். 1980ஆம் ஆண்டு முதல் இளைஞர்கள் கொடி பிடித்து கஷ்டப்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர். உரிய அங்கீகாரம் கிடைக்காததால் இளைஞர்கள் தற்போது கட்சிக்கு வருவதில்லை” என்று குற்றம் சாட்டினார். அவரின் கருத்திற்கு கூட்டத்தில் இருந்த திமுகவினர் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் பேசுவதை வீடியோ எடுத்த செய்தியாளர்களை திமுக நிர்வாகிகள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 56வது முறையாக நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.