ETV Bharat / state

நெல்லை பணகுடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்த திருநங்கைகள்.. போலீசார் அடித்து விரட்டியடிப்பு.. என்ன நடந்தது? - Attack on Nellai Transgenders

நெல்லை பணகுடி காவல் நிலையம் அருகே திருநங்கைகளை ஓட ஓட போலீசார் விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சந்திப்பு கோப்புப்படம்
நெல்லை சந்திப்பு கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 8:38 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பணகுடி காவல் நிலையத்தை நேற்றிரவு திருநங்கைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசார் அவர்களை கலைந்து செல்லக் கூறியும் அங்கிருந்து செல்லாத காரணத்தால், போலீசார் திருநங்கைகளை லத்தியால் அடிக்கும், காலால் உதைத்தும் விரட்டி அடித்தது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து விசாரித்த போது, பணகுடி அருகே நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், சிலரிடம் வலுக்கட்டாயமாக வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் பலரை வழிமறித்து, அவர்களின் செல்போன், பணத்தைப் பறிப்பதாகவும் பணகுடி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தரப்பில் புகார் சென்றுள்ளது.

அந்த வகையில், நேற்று முன்தினம் பொதுமக்களிடம் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதாக இரண்டு திருநங்கைகளை போலீசார் விசாரணைக்காக பணகுடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து தான், நேற்று இரவு திருநங்கைகள் பணகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது 2 பேரையும் நாங்கள் கைது செய்யவில்லை, விசாரணைக்குப் பிறகு அனுப்பி விடுவோம், எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என போலீசார் பலமுறை கூறியுள்ளனர். ஆனாலும், போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளாத திருநங்கைகள், தொடர்ந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பலமுறை கூறியும் கேட்காத காரணத்தால், ஒரு கட்டத்தில் போலீசார் லத்தியால் திருநங்கைகளை விரட்டி அடித்தனர். அப்போது ஒருவர் திருநங்கைகளை காலால் எட்டி உதைத்து விரட்டியடித்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. குறிப்பாக, போலீசார் தாக்குதலில் திருநங்கை ஒருவர் அரை நிர்வாணத்தோடு ஓடும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.