ETV Bharat / state

அரியலூரில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் - எப்போது தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 5:34 PM IST

Vehicle Public auction: அரியலூரில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள், மாா்ச் 21 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர்: இது குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் தெரிவித்ததாவது, “மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜய ராகவன் வழிகாட்டுதலின்படி, மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் மார்ச் 21 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.

ஏலம் எடுப்பதற்கான விதிமுறைகள்:

  • ஏலத்தில் பங்கேற்பவர்கள், ஏலம் விடப்படும் நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயா் மற்றும் முகவரியை பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • பதிவு செய்து கொண்டவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை.
  • வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது.
  • வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.
  • பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை.
  • வாகனங்கள் ஏலம் நடைபெறும் தேதி அன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம்.
  • ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.
  • ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
  • மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம்.

இதையும் படிங்க: கிராமப்புற பட்டதாரிகளுக்கு ரூ.15 லட்சம் வரை ஊதியம்.. தஞ்சையை ஐடி நகரமாக்கிய கந்தகுமாரின் சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.