ETV Bharat / state

ஓய்வு பெறும் நாளில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை திடீர் சஸ்பெண்ட்.. யார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை? - ADSP VELLADURAI SUSPENDED - ADSP VELLADURAI SUSPENDED

adsp velladurai suspended: பிரபல என்கவுண்டர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாக அவரது தரப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை(கோப்புப்படம்)
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 11:29 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பரபரப்பாக பேசப்பட்டவர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இவர் எந்த மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாலும் அங்கு ஒரு அதிரடி ஆபரேஷன் நடக்கும் என்றே காவல்துறை வட்டாரத்தில் பேசப்படும். குறிப்பாக கமிஷன், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற குற்ற சம்பவங்கள் எங்கு அதிகமாக நடக்கிறதோ அந்த பகுதிக்கு வெள்ளத்துரை நியமிக்கப்படுவார்.

வெள்ளத்துரை கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்திகுப்பத்தில் ரவுடி வீரமணியை என்கவுண்டர் செய்ததில் வெள்ளத்துரை மிகவும் பிரபலமானார். இதேபோல கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரவுடிகளை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி, காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரவுடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று வெள்ளத்துரை பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஆணையை உள்துறைச் செயலாளர் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை அவர் சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் அவர் மீது எந்த தவறும் இல்லை எனவும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ராமு என்கிற 'கொக்கி குமார்' என்ற ரவுடி காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தது சம்பந்தமாக சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் வெள்ளத்துரையும் சிபிசிஐடியின் விசாரணை வளையத்துக்குள் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணையானது நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதற்கு மத்தியில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகள் விலகளுக்கு பிறகு புதிய திட்டங்கள்.. மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.