ETV Bharat / state

முல்லை பெரியாறு அணையில் நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு! - inspection at Mullai periyar Dam - INSPECTION AT MULLAI PERIYAR DAM

Inspection at Mullai periyar Dam: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர்
நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 1:32 PM IST

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து பராமரிக்க, மூவா் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்ப்பதற்கு உத்தரவு பிறப்பித்து, தற்போது இந்த குழுவில் ஐவர் உள்ளனர். இந்த மத்திய குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய துணை கண்காணிப்பு குழு அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மத்திய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மத்திய குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. தற்போது கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது அணையின் நீர்மட்டம் 127.05 அடியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் சாம் இர்வின், உதவிச் செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை அணில் குமார், நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர், உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப்பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்காக கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக, கேரளா அதிகாரிகள் படகின் மூலமாக அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம் மதகுப் பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

அதனைத் தொடா்ந்து மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: மோசடி செய்த நிதி நிறுவனங்கள் தொடர்பான விசாரணை - பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விளக்கம்! - Madras High court

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.