ETV Bharat / state

தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட தருவைகுளம் கிராம மக்கள்.. காரணம் என்ன? - THOOTHUKUDI MP KANIMOZHI - THOOTHUKUDI MP KANIMOZHI

Tharuvaikulam Fishermen Arrested issue: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டித்துள்ள நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள் கோரிக்கை வைத்தனர்.

தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தூத்துக்குடி எம்பி கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 7:43 AM IST

தூத்துக்குடி: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி. இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தருவைகுளம் கிராமத்தில் நன்றி தெரிவிக்கச் சென்ற போது, தருவைகுளத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திடீரென எம்பி கனிமொழியை முற்றுகையிட்டனர்.

கனிமொழியை முற்றுகையிட்ட தருவைகுளம் கிராம மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

அதாவது, தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 5ஆம் தேதி மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். பின்னர், அந்த 22 மீனவர்களையும் கைது செய்து ஆக.20ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, மீனவர்கள் 22 பேரும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் வாரியபொல சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், தூத்துக்குடி தருவைகுளம் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

தற்போது, எதிர்ப்பு தெரிவித்தும், கனிமொழி எம்பியிடம் மீனவர்களை விடுவிக்க பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாகக் குற்றம் சாட்டியும் கிராம மக்கள் கனிமொழியை முற்றுகையிட்டனர். பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும், இதுதொடர்பான தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கனிமொழி உறுதியளித்ததை தொடர்ந்து கனிமொழி எம்பி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்து; ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.