ETV Bharat / state

விநாயகர் சிலையில் உருவான கோட் விஜய்.. ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தல்! - Goat vinayagar

'தி கோட்' திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு , ஓவிய ஆசிரியர் செல்வம் விநாயகர் சிலையை வைத்து நடிகர் விஜயின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.

விநாயகர் சிலையை கொண்டு வரையப்பட்ட விஜய் ஓவியம்
விநாயகர் சிலையை கொண்டு வரையப்பட்ட விஜய் ஓவியம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 10:28 AM IST

கள்ளக்குறிச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இந்தநிலையில் "இல்லங்களில் விநாயகர்.. திரையரங்குகளில் கோட்" என்பதைக் குறிக்கும் விதமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் விநாயகர் சிலையை வைத்து நடிகர் விஜயின் உருவப்படத்தைப் படத்தை வரைந்துள்ளார்.

விநாயகர் சிலையை கொண்டு வரையப்பட்ட விஜய் ஓவியம் (Credit - ETV Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம், இவர் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய அசாத்திய ஓவிய திறன் மூலம் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் போன்றவற்றில் கிளாஸில் ஓவியம் வரைவது, பதாகைகள் வைத்து ஓவியம் வரைவது, கைகை கட்டிக் கொண்டு தலையில் பிரஷை வைத்துக் கொண்டு ஓவியம் வரைவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வரைந்து அசத்தி வருகிறார்.

தி கோட்: இந்தநிலையில் வெட்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The Greatest of All Time). இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சிநேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை இத்திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

விஜய் ஓவியம்: இந்தநிலையில் கோட் படம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் "இல்லங்களில் விநாயகர்.. திரையரங்குகளில் கோட்"என்பதைக் குறிக்கும் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார் ஓவியர் செல்வம். இதற்காக பிரஸ் ஏதும் பயன்படுத்தாமல் விநாயகர் சிலை தலையில் இருக்கும் கிரீடத்தை நீர்வண்ணத்தில் தொட்டு விஜயின் ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

ஓவியம் புதுப்பொலிவு பெற வேண்டும்: இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் செல்வத்திற்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடையே ஓவியர் செல்வம் பேசுகையில், "பேனர் கலாச்சாரம் தொடங்கியதிலிருந்து ஓவியம் மீதான ஆர்வம் பலருக்குக் குறைந்துவிட்டது. இதனை மீட்டெடுக்கும் வகையில் வித்தியாசமான முறையில் ஓவியங்களை வரைந்து வருகிறேன். கடந்த 23 வருடங்களாகத் தொடர்ந்து இது போன்று செய்து வருகிறேன், ஓவியம் புதுப்பொழிவு பெற வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தியேட்டரிலேயே கோட் பட டிக்கெட் ரூ.2 ஆயிரமா?.. கேரளா விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.