ETV Bharat / state

நடிகர் சூரி உணவகம் குறித்த குற்றச்சாட்டு - பரபரப்பை கிளப்பும் வீடியோ! - Actor Soori hotel - ACTOR SOORI HOTEL

Actor Soori's Madurai Amman Hotel: மதுரையில் நடிகர் சூரி நடத்திவரும் அம்மன் உணவகம் வாடிக்கையாளர் ஒருவரின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:37 PM IST

மதுரை அம்மன் உணவகம்

மதுரை: மதுரை மாவட்டம், ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர், நடிகர் பரோட்டா சூரி. இவர், தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராவார். சினிமா மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னுடைய சகோதரர்கள் பெயரில் மதுரை தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒத்தக்கடை, செல்லூர், கரிமேடு, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவகம் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு குறைந்த விலையில், தரமான உணவுகள் வழங்க வேண்டும் என்று குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு மிக குறைவாக இருப்பதாகவும்; மேலும், விலை அதிகமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் அவர், 'நடிகர் சூர்யா அவர்களே.. நீங்கள் தொடர்ந்து பல்வேறு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் உணவகத்தில் நடைபெறும், இது தொடர்பான குற்றச்சாட்டு உங்கள் பார்வைக்கு வருகிறதா? இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுங்கள்' எனக் கூறி கோரிக்கை வைத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் சூர்யா உணவகத்தில் ஜிஎஸ்டி வரி முறையாக கட்டவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது விலை அதிகமாக இருப்பதாகவும் அளவு குறைவாக இருப்பதாகவும் புதிய புகார் ஒன்று எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: தென்காசி அருகே நிகழ்ந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய அரசு பேருந்து... நடத்துநர் பலி; 11 பேர் படுகாயம்! - TENKASI BUS ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.