ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பு: 'குப்பைத்தொட்டிக்கு தான் போகும்'.. தீர்மானத்தில் இதையும் சேருங்க.. - வேல்முருகன் கொடுக்கும் ஐடியா! - caste census in tamilnadu

tn caste census resolution: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் - முதல்வர் ஸ்டாலின்
வேல்முருகன் - முதல்வர் ஸ்டாலின் (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 1:54 PM IST

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என்றால், தமிழ்நாடு அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் எனவும் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் தனித் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது.

'குப்பைத்தொட்டிக்கு போகும்': அதே வேளையில் இந்த அரசினர் தீர்மானத்தில் ஒரு திருத்தம் தேவை என பேரவையில் தெரிவித்திருந்தேன். ஒன்றிய அரசு சமூக நீதிக்கு எதிரானது. இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம், முல்லை பெரியாருக்கு எதிரான தீர்மானம், நீட்டுக்கு எதிரான தீர்மானம் போல சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக்கூடிய தீர்மானத்தையும் ஒன்றிய அரசு குப்பைத்தொட்டியில் போடும்.

தீர்மானத்தில் இதையும் சேருங்க: ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடிதம் எழுதியதற்கும் பதில் இல்லை. ஒன்றிய அரசு சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அவர்களிடத்தில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அதனால் அந்த சட்டத் திருத்தத்தில், ஒன்றிய அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பதை சேர்த்து, ஏழு கோடி மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்திற்கு பதில் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாடு அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் எனவும் மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதனை முதலமைச்சரை அறையில் சந்தித்து சொன்னேன். ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம். கண்டிப்பாக எதிர்வரும் காலங்களில் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று முதலமைச்சர் நேர்மறையான பதில் அளித்து இருக்கிறார்.

சமூக நீதிக்கு போராடிய 21 போராளிகளில் 9 பேர் வாழ்ந்த இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. எதிர்க்கட்சிகள் அவர்களுக்கான அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும். கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேச சபாநாயகர் நேரம் தருகிறார். தலைவரும், முதலமைச்சரும் நேரம் அளித்தார்கள். ஆனால், அதிமுகவினர் வர மறுக்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவினருக்கு பங்கு இருக்கிறதா இல்லையா என்பதைவிட அரசு சட்டம் இயற்ற வேண்டும். ஒரு கிராமத்தில் கள்ளச்சாராய பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு அந்த பகுதி சார்ந்த அமைச்சர், அதிகாரிகள், ஆட்சியர் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இதுபோன்ற கள்ளச்சாராய நிகழ்வுகளுக்கு அரசியல் ரீதியான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு அனைவரும் இதற்கு பொறுப்பேற்கப்பட வேண்டும்'' என வேல்முருகன் கூறினார்.

இதையும் படிங்க: 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் உள்ளிட்ட 16 அறிவிப்புகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.