ETV Bharat / state

"மக்களுக்கு பயனளிக்காத ஒரு வெற்று அறிக்கையாகவே பட்ஜெட் உள்ளது" - திருமாவளவன் குற்றச்சாட்டு - திருமாவளவன் குற்றச்சாட்டு

Thirumavalavan: பாஜக தடுமாற்றம் அடைந்திருப்பதாகவும், தேர்தலை சந்திப்பதில் பாஜகவினருக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருப்பதாகவும் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

VCK Leader Thirumavalavan
திருமாவளவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:47 AM IST

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

தஞ்சாவூர்: சிபிஐ-எம்எல் கட்சியின் கட்சி சார்பில், இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று (பிப்.1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றிருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்த தரப்பை சார்ந்த மக்களுக்கும் பயனளிக்க கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதும் இல்லாத, ஒரு வெற்று அறிக்கையாக இருக்கிறது, இந்த பட்ஜெட் அறிக்கை. பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில், அவர்கள் (பாஜக) ஏதேனும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை செய்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

பாஜக கட்சி ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத ஒரு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. பாஜக தடுமாற்றம் அடைந்திருக்கிறது. தேர்தலை சந்திப்பதில் அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து, டி.ஆர்.பாலு தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தவகையில், விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பேச்சுவார்த்தையில் பங்குபெறும். 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன், ஒரு கட்டுக்கோப்பான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது.

இதையும் படிங்க: பிப்.12-இல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், அதன்பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும், பின்னர் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும், இப்போது நடக்க உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி ஒற்றுமையாக, கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக-அதிமுக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால் தான், அது சிதறிப்போனது. இன்னும் அதிமுக கூட்டணியில் யார்..யார்? இருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் யார்..யார்? இருக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

வழக்கம் போல, பாமக தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு, எந்த அணியோடு சேரப் போகிறார்கள் என்பதை சூசகமாக வைத்துள்ளனர். திமுக கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணியாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் வெகுவான ஆதரவை மீண்டும் பெற்று, 40-க்கு 40-யை திமுக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Interim Budget 2024: கர்பப்பை புற்றுநோயை தடுக்க சிறுமிகளுக்கு தடுப்பூசி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.