ETV Bharat / state

"குழந்தைகள் செல்ஃபோன் பயன்பாட்டை குறைத்து நூல்களை அதிகம் படிக்க வேண்டும்" - வைரமுத்து அட்வைஸ்! - Vairamuthu advise to students

Vairamuthu advise to students: படிக்கும் குழந்தைகள் செல்ஃபோன் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு, மற்ற நேரங்களில் பள்ளிப் பாடம், நூலக பாடம் என இரண்டையும் படிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

விழாவில் உரையாற்றும கவிஞர் வைரமுத்து
விழாவில் உரையாற்றும கவிஞர் வைரமுத்து (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 12:37 PM IST

தேனி: பெரியகுளம் தென்கரை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1923ஆம் ஆண்டு மதுரை மாவட்ட கல்வி அலுவலராகப் பணியாற்றிய லண்டனைச் சேர்ந்த தாம்சன் என்ற ஆங்கிலேயரால் நூறு புத்தகங்களுடன் கூடிய ஒரு நூலகம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நூலகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களுடன் இரண்டு தளங்களைக் கொண்டு பெரியகுளத்தில் கிளை நூலகம் நூறாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.

விழாவில் பேசும் கவிஞர் வைரமுத்து (Video Credit - ETV Bharat Tamilnadu)

நூறாண்டுகளைக் கடந்த பெரியகுளம் தென்கரை கிளை நூலகத்தில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமை ஏற்று நூற்றாண்டு மலரை வெளியிட முதல் புத்தகத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வாசகர்கள் மத்தியில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், "சிறுவயதில் நூலகத்திற்குள் நுழைந்தபோது என் வீட்டிற்குள்ளும் நாட்டிற்குள்ளும் கற்பிக்கப்பட்ட ஜாதி அழிந்தது;வேதம் ஒழிந்தது. மத பேதங்கள் கலைந்து ஏற்றத்தாழ்வுகள் அகன்று பகுத்தறிவு சமுதாயம் உருவாகும் இடம் நூலகம்" என்றார்.

மேலும், "பள்ளிப்படிப்பின்போது நூலகத்திற்கு செல்லும்முன் ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்ததாகவும், நூலகத்திற்கு சென்றபின் உலகம் புரிந்தது. பள்ளியில் அகரம் மட்டுமே அறிமுகம், ஆனால் நூலகத்தில் தான் காவியங்கள் அறிமுகமாகிறது. படிக்கும் குழந்தைகள் செல்ஃபோன் பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு, மற்ற நேரங்களில் பள்ளிப் பாடம், நூலக பாடம் என இரண்டையும் படித்தால் தான் புதுக் குடிமகனாக உருவாக முடியும்" எனவும் அவர் அறிவுரை கூறினார்.

"முதல் நூலகத்தை உருவாக்கிய சென்னா செர்ஃப்க்கும், 3,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியா நாட்டில் வாழ்ந்த மன்னனுக்கும் தமிழர்கள் அனைவரின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். மொழியையும், நூலகத்தையும் காப்பாற்றினால் ஒரு இனத்தின் கலாச்சாரம் நாகரிகம் காப்பாற்றப்படும். அதே நேரத்தில் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் மொழியையும், நூலகத்தையும் அழித்துவிட்டால் போதும், இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உண்டு. இலங்கையில் ஈழத் தமிழரின் படுகொலையின்போது அங்கு இருந்த பெரிய நூலகம் தகர்க்கப்பட்டது. பல்வேறு மன்னர்கள் தங்களது படையெடுப்புகளின்போது நூலகங்களை அழித்துள்ளனர்" என்று வைரமுத்து சுட்டிக்காட்டினார்.

பெற்றோர் மற்றும் பள்ளி குழந்தைகள் வீடுகள்தோறும் நூலகங்களை உருவாக்க வேண்டும். நூலகங்களில் பெண்கள் அதிகம் பயன்படுத்தி வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டும். ஒரு பெண் படித்தால் அந்த தலைமுறையே படித்ததாக அர்த்தம். பெரியகுளம் கிளை நூலகத்தின் நூற்றாண்டு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் அளவிற்கு தனக்கு காலம் கருணை காட்டி உள்ளது" எனவும் வைரமுத்து பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தான் பெரியகுளத்தில் முதன்முதலில் பார்த்த வண்ணப் படம், முதன்முதலில் மை பேனா வாங்கிய கடை, பொதுத்தேர்வுக்கு வந்தது, அதன்பின் பட்டப்படிப்பிற்காக சென்னை சென்றபோது பெரியகுளம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறியது என மலரும் நினைவுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கிளை நூலக நூற்றாண்டு விழாவில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார், முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வீரன் அழகுமுத்துக்கோனின் 314வது பிறந்த நாள் விழா; தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை! - Alagumuthukone 314th Birthday

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.