ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து; மன்னிப்பு கேட்டும் சர்ச்சையாக்குவதா? திமுகவின் அரசியல் இப்போ எடுபடாது - எல். முருகன்

சென்னை மழை வெள்ளத்தை சரியாக கையாளாததால் மக்களின் கவனத்தை திசை திருப்ப தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையை திமுக எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 4:54 PM IST

சென்னை: விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் முழுக்க மக்களை திசை திரும்பும் செயலாகும். 10 ஆண்டுகள் காங்கிரஸ் - திமுக ஆட்சியிலும் , திமுக அமைச்சர்கள் இருந்த துறைகளிலும் இந்தி விழாக்கள் நடத்தப்பட்டன. இது புதிதாக நடக்கும் விழா கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடக்க கூடிய விழா தான் என்றார்.

திருக்குறளை கொண்டு சேர்த்துள்ளோம்: மேலும், தமிழை பாதுகாப்பதிலும், உலகம் முழுவதும் தமிழை கொண்டு செல்வத்திலும்முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. பாரதியார் பெயரில் சிறப்பு இருக்கை, உலகம் முழுவதும் திருக்குறளை கொண்டு சென்றது, உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைப்போம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் செய்யப்பட்டு உள்ளது. இதனை எந்தந்த நாடுகளுக்கு செல்கிறோமோ அந்த நாடுகளில் செய்து வருகிறோம். திருக்குறளை 35 உலக நாடுகளின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.

அத்துடன், ஜ.நா. சபையில் ''யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று முதன் முதலில் பிரதமர் பேசி, தமிழருக்கு பெருமை சேர்த்து உள்ளார். மூத்த தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

மன்னிப்பும் கேட்டுவிட்டனர்: முதலமைச்சர், கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடுகின்றனர். திமுக ஆர்ப்பாட்டம் செய்கிறது. ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறுக்கு, அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது. தர்மமும் கிடையாது. எல்லா விஷயத்திலும் அரசியல் செய்ய கூடாது.

இதையும் படிங்க: பூ பறிக்க செல்ல மறுத்த தந்தை.. மண் வெட்டியால் அடித்து கொன்ற மகன்.. திருப்பத்தூரில் கோரமான சம்பவம்!

திமுக அரசு மழையை சரியாக கையாளவில்லை. ஒரு நாள் மழைக்கே திட்டமிடவில்லை. இதை எல்லாம் திசை திருப்ப வேண்டும். இந்தியா கூட்டணி கட்சியினர் யோசிக்காமல் அடிப்படை யோசனையில்லாமல் இந்த விவகாரத்தை கையாள்கின்றனர். சின்ன தவறுக்கு சிறப்பு விருத்தினராக வந்த கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். இதை அரசியல் செய்ய வேண்டும் என்று செய்கின்றனர். 1960ம் ஆண்டுகளில் திமுக செய்த அரசியல் எல்லாம் இப்போது செய்ய முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்திக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் கிடையாது. திமுக நிர்வாகிகள் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிக்களில் இந்தி இருப்பதால் நடத்த மாட்டோம் என்று கூற தயாரா? வருமானம் வருகிறது என்பதால் பள்ளிகளை மூட வர மாட்டார்கள். மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் நடக்காது.

திமுக ஆக்கபூர்வமான செயல்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்ற திட்டங்களை தீட்டுங்கள். சென்னை மழை வெள்ளத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தான் நாடகத்தை நடத்துகின்றனர். கூவம், அடையாறு ஆற்றை சீர் செய்யாமல் சென்னை மழை வெள்ளத்தை தடுக்க முடியாது. இந்த சின்ன யோசனை கூட இல்லாமல் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து விட்டு மழை வெள்ளத்தை வெளியேற்ற போவது எப்படி என எல். முருகன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.