கோயம்புத்தூர்: கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ருக்மணி. இவரது மகள் திவ்யா. வயதான நிலையில் இருக்கும் இருவரும் பல ஆண்டுகளாக வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பைக் கூளங்ளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். பல வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல், அக்கம் பக்கத்தினர் யாருடனும் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், இன்று அந்த பெண்களின் வீட்டிற்குள் சென்று அவர்களிடம் பேசியபடி வீட்டில் போட்டு வைத்துள்ள குப்பைக் கூளங்களை செல்போனில் படம் எடுத்துள்ளார். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை சுத்தம் செய்யவும், இரு பெண்களையும் மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் செய்து அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றதா என ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அந்த குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “திமுகவில் அடுத்தடுத்த வாரிசுகளுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும்” - பேராசிரியர் ராம.சீனிவாசன் சாடல்! - Prof Rama Srinivasan