ETV Bharat / state

செங்கல்பட்டு அருகே இரு பள்ளி மாணவர்கள் மர்ம நபர்களால் காரில் கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை! - school students kidnapped - SCHOOL STUDENTS KIDNAPPED

School Students Kidnapped: செங்கல்பட்டு மாவட்டம், ஒழலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் பயின்றுவரும் இரு மாணவர்களை மதிய உணவு இடைவேளையின் போது காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை
மாணவர்கள் கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 11:00 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் (31). இவருக்கு ஆர்த்தி (30) என்கிற மனைவியும், 11 வயது மகளும், 7 வயது மகனும் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, ஆர்த்தி தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் பிள்ளைகள் ஒழலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் முறையே 6ஆம் வகுப்பும், 2 ஆம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அக்கா, தம்பி இருவரும் இன்று( ஜூலை 8) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காரில் இரண்டு பேரையும் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வேலன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "ஸ்னூக்கர் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றதில் மகிழ்ச்சி" - அனுபமா பெருமிதம்! - anupama won gold medal in Snooker

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.