விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த 24 வயதான பெண், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். இவரது டியூசன் வகுப்பிற்கு 15 வயது பள்ளி மாணவன் ஒருவர் படிக்க வந்துள்ளார்.
அப்போது பள்ளி மாணவனுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மாணவருடன் ஆசிரியை அடிக்கடி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் மாணவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவர் டியூஷன் ஆசிரியையுடன் இருந்த உறவு பற்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் மாணவரின் தந்தை புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "இறக்கும் தருவாயில் 20 பேரை காப்பாற்றிய என் மகன்"- தந்தை பெருமிதம்! - Driver saved children and died