ETV Bharat / state

நாளை பொறியியல் கலந்தாய்வு.. 85 கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி! - Engineering admissions counseling - ENGINEERING ADMISSIONS COUNSELING

Engineering admissions counseling: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 3:47 PM IST

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது. 2024-25ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சிறப்பு பிரிவு/ பொதுப் பிரிவு: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 22) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 23) ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22, 23ஆம் தேதி நடக்கிறது. அதில் விளையாட்டுப் பிரவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 664 மாணவர்கள் 111 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 403 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,220 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.

2024-25ம் கல்வியாண்டில் பிஇ, பிடெக், பிஆர்க் பாெறியியல் படிப்பில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், நடப்பாண்டில் கம்ப்யூட்டர் தொடர்புடைய 15 பாடப்பிரிவுகளில் 2லட்சத்து 22 ஆயிரத்து 48 இடங்களிலும், இஇஇ, இசிஇ, எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரிவுகளில் 1,147 இடங்கள் என 23 ஆயிரத்து 395 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிவில், மெக்கானிக்கல் தொடர்பான பிரிவுகளில் 2 ஆயிரத்து 965 இடங்களும், ஆர்க்கிடெக்சர் படிப்பில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பினை நடப்பாண்டில் நடத்துவதற்கு அனுமதிக்கேட்ட தனியார் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழககுழுவினர் ஆய்வு செய்து, 85 பொறியியல் கல்லூரிகளுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதியை வழங்கியுள்ளது.

இணைப்பு அங்கீகாரம்: 2024-25ம் கல்வியாண்டில் 476 கல்லூரிகள் இணைப்பிற்காக விண்ணப்பித்தன. அதில் 223 கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தும், 50 கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் 2 லடசத்து12 ஆயிரத்து 336 பொறியியல் இடங்கள் இருந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 20 ஆயிரத்து 40 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாடப்பிரிவுகடந்த ஆண்டுநடப்பு ஆண்டு
கம்யூட்டர் சயின்ஸ் 96,981 இடங்கள்1,19,229 இடங்கள் (அதிகரிப்பு)
மின்னியல், மின்னணுவியல் 52,793 இடங்கள் 1,147 இடங்கள் (அதிகரிப்பு)
சிவில், மெக்கானிக்கல் 60,432 இடங்கள்57,467 இடங்கள் (குறைப்பு)
கட்டிடக்கலையி2130 இடங்கள் 1,740 இடங்கள் (குறைப்பு)

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கூடுதலாக 5 ஆயிரத்து 604 இடங்களும், ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தில் கூடுதலாக 7 ஆயிரத்து 326 இடங்களும், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் 3 ஆயிரத்து 478 இடங்கள் கூடுதலாகவும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் சைபர் செக்யூரிட்டி பாடத்தில் 2 ஆயிரத்து 400 இடங்களும் , ஏ.ஐ மற்றும் மெஷின் லேர்னிங் 60 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு டிசைன் பாடப்பிரிவில் 60 இடங்களை குறைத்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக 5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தக் கல்லூரிகள் மற்றும் போதுமான கட்டமைப்பு இல்லாத 85 கல்லூரிகளுக்கு சில நிபந்தனைகளுடன் நடப்பாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: 7.9 லட்சம் விண்ணப்பங்கள்; ஒரு பணியிடத்துக்கு முட்டி மோதவுள்ள 340 பேர்! - tnpsc group 2 exam

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.