ETV Bharat / state

சிறந்த பட்டு உற்பத்தியாளர்களுக்கு மாநில அளவில் ரொக்கப் பரிசு! - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு..! - Tamil Nadu Assembly 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 9:24 AM IST

TN Sericulture Department: மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிகள், சிறந்த விதைக்கோடு உற்பத்தியாளர்கள், மற்றும் பட்டு நூற்பாளர்கள் ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 14 அறிவிப்புகளை பட்டு வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

பட்டு வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன்
பட்டு வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. அந்த வகையில், சட்டப்பேரவையில் நேற்று (ஜூன் 25) பட்டு வளர்ச்சித் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-

நிதி உதவி:

  • தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைக்க ரூ.24 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
  • 6,500 ஏக்கரில் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவி அளிக்க நாற்பது ஏக்கர் பரப்பில் கிசான் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள்:

  • பட்டுக்கூடுகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 80 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.
  • பட்டுப்புழு வளர்ப்பில் 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு நோய்த்தடுப்பு மருந்து பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
  • 250 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் டில்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

பட்டுக்கூடு அங்காடி வளாகம், பட்டுப் புழு வளர்ப்பு மையம் மற்றும் பயிற்சி:

  • மாநிலத்தின் பட்டு நூற்பு பிரிவை மேம்படுத்தும் விதமாக, ரூ.3 கோடியே 45 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் பட்டு நோக்கு அலகுகள் நிறுவ மாநில அரசு நிதியாக ரூ.86 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படும்.
  • தருமபுரி மாவட்டத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்கப்படும்.
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைக்கட்டி பாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பட்டுக்கூடு அங்காடி வளாகம் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.
  • பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு செய்து விநியோகம் செய்திட ரூபாய் 39 லட்சம் மதிப்பில் மூன்று பெரிய அளவிலான இளம் புழு வளர்ப்பு மையங்கள் அமைக்க மாநில அரசு நிதியாக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  • 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப் புழு வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

ரொக்கப் பரிசுகள்:

  • மாநில அளவில் சிறந்த தலா மூன்று பட்டு விவசாயிகள் மற்றும் விதைக்கோடு உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
  • மாநில அளவில் சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: “கமல்ஹாசன் அரசியல் அனுபவம் இல்லாதவர்” - எச்.ராஜா தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.