ETV Bharat / state

வண்டலூர் - காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம்.. கிளாம்பாக்கம் பேருந்து முனைய நெரிசலுக்கு தீர்வு! - Kilambakkam traffic issue - KILAMBAKKAM TRAFFIC ISSUE

Kilambakkam: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பெறும் விதமாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Kilambakkam
கிளாம்பாக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 9:29 PM IST

சென்னை: இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று திறந்து வைக்கப்பட்டு, தற்போது முழு வீச்சில் இயங்கி வரும் நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 1,100 அரசுப் பேருந்துகளும், 550 ஆம்னி தனியார் பேருந்துகளும், 600 மாநகரப் பேருந்துகளும் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

வார நாட்களில் தினசரி சுமார் 50,000 - 60,000 பயணிகளும், வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 70,000 - 80,000 பயணிகளும் இப்பேருந்து முனையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற வகையில், தேவையான வசதிகள் ஏற்கெனவே ஏற்படுத்தி தரப்பட்டுள்ள நிலையில், பேருந்து முனையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், இனிமையான பயண அனுபவத்தினை வழங்கும் பொருட்டு, பல்வேறு கூடுதல் பணிகளும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலையைக் கடந்து சென்னை மார்க்கமாக செல்லும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் தற்போது அயனஞ்சேரி சந்திப்பு வரை சென்று யு (U) வடிவ வளைவில் திரும்பி, சென்னை நோக்கி சென்று வருகின்றன.

இதனால் தேவையற்ற கால விரயமும், போக்குவரத்து நெரிசலும் அங்கு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரில் ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மூலமாக வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை முதற்கட்டமாக ஒரு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) தற்போது விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் இவ்வாண்டில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இதற்கு தற்காலிக தீர்வாக, சென்னை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகளை எளிதில் கையாளும் வகையில், தற்போதைய கிளாம்பாக்கம் மாநகரப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநகரப் பேருந்துகள் மாநகரப் பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே ஜி.எஸ்.டி. சாலையைக் கடந்து எளிதாக சென்னை செல்ல இயலும். மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலின் போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கத்தை நோக்கி வரும் பேருந்துகள் வண்டலூர் சந்திப்பு வரை சென்று திரும்புவதை தவிர்த்து, புதிதாக அமைக்கப்படும் மேற்கண்ட பணிகளின் மூலம் எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைச் சென்றடையவும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இப்பணிகள் முடிவுபெறும் போது, பாதசாரிகள் ஜி.எஸ்.டி. சாலையை எளிதாக கடக்கவும் வழிவகை ஏற்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் அப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மாநகரப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் எவ்வித பேருந்து நிறுத்தமும் அனுமதிக்கப்படாத நிலையில், அரசுப் பேருந்துகளோ அல்லது தனியார் பேருந்துகளோ அங்கு நிறுத்தி பயணிகளை இறக்க எவ்வித அனுமதியும் கிடையாது.

இது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து துறை மூலமாகவும், காவல்துறை மூலமாகவும் அனுமதியற்ற முறையில் அங்கு பயணிகளை இறக்கி விடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் அப்பகுதியில் சாலையைக் கடந்து வருகின்றனர். இதற்கு தற்காலிக ஏற்பாடாக, போக்குவரத்து காவல்துறை மூலம் காவலர்கள் உதவியுடன் குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்கள் சாலையைக் கடக்கும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு எதிரில் ஜி.எஸ்.டி. சாலையில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பதை தடுக்கும் வகையிலும், அச்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், அச்சாலையில் தேவையான வெள்ளை கோடுகள், வாகன ஓட்டுகளை எச்சரிக்கும் விதமான ஒளிரும் கருவிகள் ஆகியவை தற்போது பொருத்தப்பட்டு வருகின்றன. விரைவில் அப்பணிகள் முடிவு பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் விவகாரம்.. சவுக்கு சங்கரை காவலில் எடுக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் முடிவு..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.