ETV Bharat / state

+2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை.. தமிழக அரசு நடவடிக்கை! - COUNSELLING FOR HSC STUDENT

COUNSELLING FOR STUDENTS: 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மனநல ஆலோசனை மையம் புகைப்படம்
மனநல ஆலோசனை மையம் புகைப்படம் (Credit - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 6:16 PM IST

சென்னை: 2022-2023ம் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை சேவைகள் வழங்கும் செயல்முறையைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. இதனடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46 ஆயிரத்து 932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

இவர்களில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மன நலம் கருதித் தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடு பெறுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், 2022-2023 கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதிக் குறைந்த குறியீட்டு மதிப்பெண்கள் பெற்ற 65 ஆயிரத்து 823 மாணவர்களுக்கு '104' தொலைப்பேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் '14416' நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் மூலம் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

2023-2024 கல்வியாண்டில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51 ஆயிரத்து 919 மாணவர்கள் (32164 ஆண்கள் மற்றும் 19755 பெண்கள்) என பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது.

'104' தொலைப்பேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் '14416' நட்புடன் உங்களோடு மனநல
சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மனநல ஆலோசகர்கள் 3 சுழற்சி முறையில் செயல்படுவர்.

மேலும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடு பெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மனநல உளவியலாளர்கள், மனநல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்திருந்து விடு பெற்று நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது.

மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் '104' மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் '14416' ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தனி ஏ.சி.வார்டு - மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு! - Ac Ward In Madurai Govt Hospital

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.