ETV Bharat / state

“நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவுக்கு ஓட்டு போடுங்க”.. தமிழக விவசாயிகள் சங்கம் பிரச்சாரம்! - Farmers association NOTA

TN Farmers Association: வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததாகக் கூறி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கே என்று தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் ஓட்டு நோட்டாவுக்கே”
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 3:04 PM IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

ஈரோடு: யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவதில்லை என்றும், விவசாயிகள் ஓட்டு நோட்டாவுக்கே என்றும் கிராமங்கள் தோறும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை தொடர்ச்சியாக சேதம் செய்து வருகிறது.

இவ்வாறு விவாசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொள்வது தொடர்கதையாக உள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியேறி, குடியிருப்புக்குள் வரும் காட்டு யானை, காட்டுப்பன்றி போன்றவைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இவற்றை தடுக்க வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க எந்த அரசியல் கட்சியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், கடந்த தேர்தல்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை என்பதை சுட்டிக்காட்டி, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போடுவதில்லை என்று கூறி, நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள பவானிசாகர், கோடேபாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாயிகளிடம் நோட்டீஸ் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் கூறுகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை, காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாயப் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் தாக்கி வரும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. உயிர் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று 20 வருடங்களாக போராடுகின்றனர். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவிற்கு ஓட்டு போடுவோம் என்று எச்சரித்தோம்.

இந்நிலையிலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் அனைவரும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை. விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கே என்று கூறி கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் விவசாயிகளை நேரில் சந்தித்து நோட்டீஸ் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லிக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட ஜாபர் சாதிக்; முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.