ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்; சென்னையில் சிவ்தாஸ் மீனா ஆய்வு! - Northeast monsoon

SHIVDAS MEENA: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையைs சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

SHIVDAS MEENA
சிவ்தாஸ் மீனா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 3:25 PM IST

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பல்வேறு திட்டப் பணிகளை தமிழ்நாடு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

சிவ்தாஸ் மீனா பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

மணப்பாக்கம் பகுதியில் 24.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புச் சுவர் பணிகள், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் கால்வாய்கள், எல்காட் செம்மொழி சாலை, செம்மஞ்சேரி நூக்கம்பாளையம் பாலம், பெருங்குடி மழைநீர் வடிகால் என பல்வேறு பணிகளை அவர் பார்வையிட்டார். முன்னதாக மணப்பாக்கம் அருகே அடையாறு இடது கரை ஓரங்களில் கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவர் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சென்னை முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் 15-க்கும் மேற்பட்ட பணிகளை 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எப்போதுமே எதிர்வரும் மழைக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தென்மேற்கு பருவமழையால் சென்னை சோழிங்கநல்லூர் மற்றும் கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சராசரியாக 28 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

எல்லா சூழ்நிலைகளையும் சமாளிப்பதற்காக அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைநீர் ஆற்றுப் பகுதியில் இருந்து வெளியேறும் இடங்களில் தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகளும், மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் போகாத வண்ணம் மோட்டார் வசதிகளுடன் நீர் வெளியேற்றும் கருவிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே மழைநீர் வடிகால் கட்ட வேண்டி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அவற்றை முடித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கொசஸ்தலை ஆற்றின் தடுப்புச் சுவர் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 564 கிலோ மீட்டர் தூரம் மழை நீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்பாக, சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கூட்டப்படும் கூட்டம், இந்த முறை மிக முன்கூட்டியே நடைபெற உள்ளது. அனைத்தும் தயார் நிலையில் இருக்கும் நோக்கில் முன்கூட்டியே இந்த கூட்டமானது சென்னை மாநகராட்சிக்கு மட்டும் கூட்டப்படுகிறது.

மழைக்காலங்களில் தேவையான வெள்ள நிவாரணப் பொருட்கள் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் அவைகள் தயார் நிலையில் இருக்கும். சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் பொருட்களுக்கான 19 மையங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: 15 ஆசிரியர்களுடன் லீவு போட்டு வெளியே போன எச்.எம்.. கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! - kallakurichi headmaster dismissed

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.