ETV Bharat / state

"திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல ஆளுநர் செயல்படுகிறார்" - டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு! - TKS ELANGOVAN

T.K.S.Elangovan: ஆளுநர் தான் திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத்திரம் எல்லாம் அறிவித்து திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார் என திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

டி.கே.எஸ். இளங்கோவன் புகைப்படம்
டி.கே.எஸ். இளங்கோவன் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 6:31 PM IST

சென்னை: திருவள்ளுவர் திருநாள் விழாவிற்கு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் காவிநிற உடை அணிந்திருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தை முதல் நாளை திருவள்ளுவர் தினமாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ஆளுநருக்கு தமிழ்நாடு பண்பாடும் தெரியாது. தமிழ்நாடு பழக்க வழக்கமும் தெரியாது. திருவள்ளுவரும் தெரியாது. ஆளுநர் தான் திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத்திரம் எல்லாம் அறிவித்து திருவள்ளுவருக்கும் காவி உடை அணிவித்து, இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்.

இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். திருவள்ளுவருக்கும், ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு பிரமதர் மோடி தொடங்கியதை, ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், ஆளுநரின் செயலை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

திருக்குறளில் ஒரு குறள் கூட ஆளுநருக்கு தெரியாது. ஆளுநரின் செயல்பாடுகளில் அவரின் அறியாமை வெளிப்படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த காரணத்தால் தான் வடமாநில பிரச்சாரங்களில் தமிழகத்தைப் பற்றி விமர்சித்து மோடி பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டு மக்கள் கொள்ளை அடிப்பவர்கள் அல்ல" - பிரதமருக்கு அப்பாவு பதில்! - Appavu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.