ETV Bharat / state

கந்து வட்டி கொடுமை; திருவாரூரில் பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை! - பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை

Beauty Parlor Owner Suicide: கந்து வட்டி கொடுமை அதிகரித்த நிலையில், தற்கொலைக்கு முயன்ற பியூட்டி பார்லர் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Beauty parlor owner commits suicide after writing letter due to usury
கந்து வட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்து விட்டு பியூட்டி பார்லர் உரிமையாளர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 2:06 PM IST

Updated : Feb 10, 2024, 5:06 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கரை தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (47). இவருக்கு பானுமதி என்ற மனைவியும், விஷ்வா, பாக்யலட்சுமி என்கின்ற மகனும், மகளும் உள்ளனர். பாஸ்கரன் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் புறவழிச் சாலையில், பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது மகனும், அந்தக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற பாஸ்கரன், கூடூர் பகுதியில் தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், ஆம்புலன்ஸ் மூலம் பாஸ்கரனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது மொபைல் பின்புறம் இருந்த கடிதம் ஒன்று, பாஸ்கரனின் மகனுக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், நான் திருவாரூர் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் இனியன் ஆகியோரிடம், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கினேன்.

இதுவரை 18 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய நிலையில், கந்து வட்டி மீட்டர் எனக் கூறி, மேற்கொண்டு 12 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ந்து என்னை மிரட்டி வந்ததுடன், எனது மகனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதனால் என்னால் தொழில் செய்யவே முடியவில்லை. எனவே, எனது இந்த முடிவிற்கு கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்தான் காரணம் எனக் குறிப்பிட்டு, அவர்களது தொலைபேசி எண்களையும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (பிப்.9) மாலை பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பாஸ்கரனின் மனைவி பானுமதி, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பாஸ்கரன் உடலைக் கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தாலுகா காவல் நிலையத்தில் காத்திருந்த பாஸ்கரனின் மனைவி மற்றும் மகன் கதறி அழுதது, காண்போர் நெஞ்சை கனக்க வைத்தது. இது குறித்து உயிரிழந்த பாஸ்கரனின் மகன் விஷ்வா கூறுகையில், "கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றதற்கு வட்டியாக 18 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், மேற்கொண்டு 12 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ச்சியாக கடைக்கு வந்து மிரட்டினர்.

இதனால் எனது தந்தை தூக்கமில்லாமல் தவித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், ஜூன் மாதத்தில் 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்ட போதும், தொடர்ந்து கோவிந்தராஜனும், அவரது மகனும் எங்களை மிரட்டி வந்தனர். இதன் காரணமாகவே எனது தந்தை உயிரிழந்துள்ளார். எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: வருமானம் இல்லாததால் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை: திருப்பத்தூர் போலீசார் விசாரணை!

Last Updated : Feb 10, 2024, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.