ETV Bharat / state

82 வயதில் கருநாகக்கடி.. 107 வயதில் எள்ளுப்பேரன்களுடன் கனகாபிஷேகம் கொண்டாடிய பேச்சியம்மாள் பாட்டி! - Tiruppur Pechiammal 107 years old - TIRUPPUR PECHIAMMAL 107 YEARS OLD

Tiruppur Pechiammal 107 years old: 82 வயதில் பாம்பு கடித்தது, அப்போதும் நிதானமாக செயல்பட்டு தற்காத்துக் கொண்டு மீண்டவர் எங்கள் பாட்டி என பெருமிதம் கொள்கிறார் பேச்சியம்மாள் கொள்ளுப்பேத்தி கலைவாணி.

பேச்சியம்மாள்  பாட்டியின் குடும்பம், பேச்சியம்மாள்
பேச்சியம்மாள் பாட்டியின் குடும்பம், பேச்சியம்மாள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 6:35 PM IST

Updated : Sep 3, 2024, 2:54 PM IST

திருப்பூர்: ஆயிரம் மூன்றாம் பிறைகளை பார்த்தவர்கள் சதாப்த பூர்த்தி அடைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், 1,300 மூன்றாம் பிறைகளுக்கு மேல் கண்டவர் திருப்பூர் சின்னக்காளி பாளையத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள். அவருக்கு வயது 107. கரைப்புதூர் சின்னக்காளிபாளையத்தில் ஆறுமுக முதலியாரின் மனைவியான இவர், கணவருடன் இணைந்து நெசவுத்தொழில் செய்து வந்து இருக்கிறார்.

பேச்சியம்மாள் குடும்பத்தினர் பேட்டி (Credits- ETV Bharath Tamil Nadu)

இப்போது 107 வயதான நிலையில் மகன் வீட்டில் வசிக்கிறார். ஆனாலும், இன்னும் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். பேச்சியம்மாளுக்கு மொத்தம் 3 மகன்கள், 2 மகள்கள், 8 பேரன்கள், 5 பேத்திகள், 12 கொள்ளுப்பேரன்கள், 6 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். இதில் 5வது தலைமுறையாக 2 வயதான ஒரு எள்ளுப்பேரனும் இருக்கிறார். "கம்பு, வரகு, திணை, கோதுமை இத்துடன் சிறிது அன்பையும் கலந்து வாழ்வியலோடு இணைத்துக் கொண்டதால் 107 வயதைக் கடந்தும் மன நிம்மதியோடு வாழலாம்" என்கிறார் பேச்சியம்மாள்.

உறவுகள் அனைவரையும் அன்போடு அரவணைப்பதால், இவரது 107வது பிறந்தநாளைக் காண 600க்கும் மேற்பட்டோர் வந்து பேச்சியம்மாள் கனகாபிஷேகத்தில் ஆசிகளைப் பெற்றுச் சென்றனர். கனகாபிஷேகத்தின் போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. மந்திரங்கள் ஒத, அக்னி முழங்கிட சிறப்பான முறையிலே கனகாபிஷேகம் நடைபெற்றது.

பரதநாட்டியம், வள்ளி கும்மியாட்டம் என பாரம்பரியக் கலைகளை உறவுகளே ஆடிப்பாடி பாட்டியை பெரும் மகிழ்ச்சி அடையச் செய்தனர். தங்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பேச்சியம்மாளுக்கு சிறப்பான ஒரு விழா வைக்க வேண்டும் என அனைத்து உறவுகளும் எண்ணி, வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒரு வாரத்துக்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளும் செய்ததாக கூறுகின்றனர்.

மேலும், இந்த விழாவில் பேச்சியம்மாள் தந்தை தாயுடன் பிறந்த உறவுகளான இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட உறவுகளை தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்த விழாவின் சிறப்பாக, அதில் பங்கேற்ற இளம் தலைமுறையினரிடம் தாத்தா, பாட்டி, அத்தை, மாமாக்களின் வாழ்க்கையில் நிகிழ்ந்த இனிமையான குடும்ப நினைவுகளைப் பகிர்ந்து, "இது போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும்"என பேச்சியம்மாள் அறிவுரை கூறினார்.

பேச்சியாம்மள் குறித்து பேசிய கொள்ளுப்பேத்தி கலைவாணி, “இன்றைய தலைமுறையினரிடம் அதிகமான கோபம் வருவதை காண்கிறேன். எங்கள் பாட்டியை எப்போதும் சாதுவானவராகத்தான் பார்த்திருக்கிறேன், பாட்டியின் 82 வயதில் கருநாகப் பாம்பு கடித்தது, அப்போது நிதனாமாக செயல்பட்டு தற்காத்து சிகிச்சை பெற்று குணமடைந்தார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharath Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு.. ஆட்டிசம் பாதித்த மகனுக்காக கலந்து கொண்ட தந்தை!

Last Updated : Sep 3, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.